விவாகரத்து அன்னைக்கும் தனுஷ் பண்ணுன அந்த விஷயம்.. ஆடிப்போன பிரபலங்கள்.!

தனுஷ் மற்றும் நயன்தாராவிற்கு இடையேயான பிரச்சனை என்பது தொடர்ந்து தமிழ் சினிமாவில் இருந்து கொண்டுதான் இருக்கிறது அதே சமயம் அதையெல்லாம் தாண்டி நடிகர் தனுஷ் தொடர்ந்து அவருக்கான விஷயங்களில் முன்னேறிக் கொண்டுதான் இருக்கிறார்.

என்னதான் நயன்தாரா தொடர்ந்து தனுஷ் குறித்து பதிவுகளை வெளியிட்டு வந்தாலும் கூட தனுஷ் அதற்கு எந்த பதிலும் அளிக்கவில்லை என்று தான் கூற வேண்டும். இந்த நிலையில் நயன்தாரா தொடர்ந்து அவர் மகிழ்ச்சியாக இருப்பதை மக்களுக்கு தெரிவிக்கும் வகையில் குடும்பத்துடன் புகைப்படங்கள் வெளியிடுவது,

dhanush
dhanush
Social Media Bar

நடிகர் தனுஷ்:

தனது கணவர் விக்னேஷ் உடன் புகைப்படங்கள் வெளியிடுவது போன்றவற்றை செய்து வந்தார். ஆனால் தனுஷ் அந்த மாதிரி மகிழ்ச்சியாக இருக்கும் புகைப்படங்கள் எதையும் வெளியிடவில்லை. ஆனால் அவருக்கு சமீபத்தில் தான் விவாகரத்து நடந்தது.

அந்த விவாகரத்து முடிந்த அன்றே மாலை ஒரு திருமணத்தில் கலந்து கொண்டார் தனுஷ். அந்த திருமணத்தில் மிக மகிழ்ச்சியாக தனுஷ் இருந்ததை பார்த்து பலருமை அதிர்ச்சி அடைந்தனர். இது குறித்து சினிமா பத்திரிகையாளர்கள் கூறும் பொழுது தனுஷை பொருத்தவரை வாழ்க்கையில் எவ்வளவு கஷ்டங்களை கண்டாலும் நிதானித்து வாழ பழகிக் கொண்டார் அதனால்தான் விவாகரத்து அன்று கூட அவரை மகிழ்ச்சியாக நம்மால் பார்க்க முடிகிறது என்று கூறுகின்றனர்.