Tamil Cinema News
எனக்கு ஹிந்தி தெரியாது.. வட இந்தியாவில் மாஸ் காட்டிய தனுஷ்..!
தற்சமயம் நடிகர் தனுஷ் நடித்து பேன் இந்தியா அளவில் வெளியாக இருக்கும் திரைப்படம் குபேரா. இந்த திரைப்படத்தில் பிச்சைக்காரன் மாதிரியான ஒரு கதாபாத்திரத்தில் நடித்து இருக்கிறார் தனுஷ்.
ஒரு பிச்சைக்காரனுக்கும் ஒரு கோடீஸ்வரனுக்கும் இடையே நடக்கும் சண்டைதான் படத்தின் கதை என்று கூறப்படுகிறது. இந்த படத்திற்கு அதிக எதிர்பார்ப்பு இருந்து வருகிறது. முழுக்க முழுக்க இந்த படம் மும்பையில் நடக்கும் கதைக்களம் என்றும் கூறப்படுகிறது.
இதனால் ஹிந்தியில் இந்த படத்திற்கு பெரிய மார்க்கெட் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. வில்லனாக நடிக்கும் ஜிம் சர்ப் ஹிந்தி நடிகராக இருக்கிறார்.
இந்த நிலையில் இந்த படத்தின் பிரமோஷனுக்காக சென்றிருந்த தனுஷ் அந்த விழாவில் பேசும்பொழுது தமிழில் மட்டுமே பேசி இருந்தார். ஆனால் ஹிந்தி ரசிகர்களும் அங்கு வந்திருந்தனர் அவர்களிடம் ஆங்கிலத்தில் பேசிய தனுஷ் எனக்கு ஹிந்தி தெரியாது ஆங்கிலமும் கொஞ்சமாக தான் தெரியும் எனவே பொறுத்துக் கொள்ளுங்கள் என்று நேரடியாக கூறிவிட்டார்.
வட இந்தியாவை பொறுத்தவரை இந்தியாவின் மொழி ஹிந்தி என்ற எண்ணத்தில் தான் இருந்து வருகின்றனர் எனவே எல்லோருக்குமே ஹிந்தி தெரியும் என்று அவர்கள் நினைத்து வரும் நிலையில் தமிழ்நாட்டு மக்களுக்கு ஹிந்திதெரியாது என்பதை ஆணித்தனமாக கூறி இருக்கிறார் தனுஷ்.
