News
தனுஷின் வாத்தி எப்போ ரிலீஸ் தெரியுமா? – படக்குழு அறிவித்த வெளியீட்டு தேதி
தமிழ் சினிமாவில் வரிசையாக ஹிட் கொடுத்து வரும் நடிகர் தனுஷ். அவர் நடித்த நானே வருவேன் திரைப்படமானது, பொன்னியின் செல்வன் திரைப்படத்துடன் வெளியானது. அப்படியும் கூட படம் மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது.

இந்நிலையில் தனுஷ் அடுத்து நடித்து வந்த திரைப்படம் வாத்தி. இந்த படத்தில் பள்ளி ஆசிரியராக நடித்துள்ளார் தனுஷ். இந்த படத்தை வெங்கி அதுல்ரி என்னும் இயக்குனர் இயக்குகிறார். இவருக்கு வாத்தி முதல் படமாகும்.
இந்நிலையில் இந்த படத்தின் முதல் சிங்கிள் தற்சமயம் வெளியாகியுள்ளது. பாடல் நன்றாக இருந்ததால் படத்திற்கு மக்களிடையே எதிர்பார்ப்பு அதிகரித்து வருகிறது. படத்தில் தனுஷ் ஒரு டீசண்டான லுக்கில் நடித்துள்ளார்.
எனவே இந்த படம் எப்போது வெளியாகும் என ஆவலோடு காத்துள்ளனர் ரசிகர்கள். இந்நிலையில் இந்த படம் வருகிற பிப்ரவரி 17 ஆம் தேதி வெளியாகும் என தகவல்கள் வந்துள்ளன. இன்னும் படத்தில் சில வேளைகள் நிலுவையில் உள்ளன என படக்குழு தெரிவித்துள்ளது.
