News
குக் வித் கோமாளியில் கதறி அழுத திவ்யா துரைசாமி!.. அந்த இயக்குனர்தான் காரணம்!.
தற்பொழுது மக்கள் மத்தியில் பலரும் பிரபலமாக இருக்கிறார்கள். அந்த வகையில் யூடியூப் சேனல்கள் மூலம் பிரபலமானவர்கள், இணையதளங்களின் மூலம் ரீல்ஸ் செய்து, புகைப்படங்களை பதிவிடுவது மற்றும் குறும்படங்கள், ரியாலிட்டி ஷோக்கள் மூலம் பிரபலமாகி வெள்ளித்திரையில் தனக்கான ஒரு இடத்தை பிடிப்பார்கள்.
அந்த வகையில் தற்போது அனைவரின் மத்தியிலும் ட்ரெண்டிங்கில் இருப்பவர் திவ்யா துரைசாமி. அவர் தற்போது பகிர்ந்திருக்கும் செய்தி ஒன்று சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
நடிகை திவ்யா துரைசாமி
திவ்யா துரைசாமி 2019-ல் வெளிவந்த இஸ்பேட் ராஜாவும், இதய ராணியும் என்ற திரைப்படத்தில் ஒரு நடிகையாக அறிமுகமானார்.
இவர் பெரம்பலூர் மாவட்டத்தில் பிறந்த ஒரு தமிழ் பெண்ணாவார். அதன் பிறகு தமிழில் இவர் மதில், குற்றமே குற்றம், எதற்கும் துணிந்தவன், சஞ்சீவன் போன்ற திரைப்படங்களில் நடித்திருக்கிறார்.

இந்நிலையில் இவர் சமீப காலங்களாக மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்றார். இதற்கு காரணம் பிரபல தனியார் தொலைக்காட்சியான விஜய் டிவியில் குக் வித் கோமாளி என்ற நிகழ்ச்சியில் போட்டியாளராக இவர் கலந்து கொண்டார்.
இந்நிகழ்ச்சியின் மூலம் மக்களிடையே நல்ல பிரபலம் அடைந்தார் திவ்ய துரைசாமி. மேலும் இணையத்தில் இவரை ஃபாலோ செய்யும் ரசிகர்களின் எண்ணிக்கையும் அதிகம்.
பேட்டி ஒன்றில் பேசிய திவ்யா துரைசாமி
தற்போது திவ்யா துரைசாமி “வாழை” என்ற படத்தில் நடித்துள்ளார். இந்த படத்தில் கலையரசன், நிகிலா விமல் ஆகியோர் நடித்திருக்கிறார்கள். இந்த படத்தை மாரி செல்வராஜ் இயக்கி இருக்கிறார்.
இந்த படத்தை குறித்து திவ்யா துரைசாமி பேட்டி ஒன்றில் கூறும் போது, “வாழை” படம் பற்றி பேசினாலே நான் எமோஷனல் ஆகிவிடுவேன். மேலும் குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் “வாழை” படத்தின் ப்ரோமோஷன் வரும் போது கூட பாதவத்தி பாடல் போடும் போது நான் அழுதேன். ஏனென்றால் ஒரு வாழைப்பழம் தானே என்று அனைவரும் ஒதுக்கி விடுவார்கள். ஆனால் அந்த வாழைப்பழம் உற்பத்தியாகி வருவது என்பது சாதாரண விஷயம் அல்ல.
நான் அந்தப் படத்தில் நடித்ததை விட வாழ்ந்திருக்கிறேன். பலருக்கும் இங்கு வாழைப்பழம் பிடிக்காது. ஆனால் அந்த பழம் உற்பத்தி ஆவதற்கு எவ்வளவு கஷ்டங்கள் அனுபவிக்கிறார்கள் என்பது அந்த படத்தில் நான் அனுபவித்திருக்கிறேன் என திவ்யா துரைசாமி கூறினார். நான் அந்த படத்தில் நடித்திருக்கிறேன். ஆனால் இயக்குனர் சிறுவயதிலிருந்தே அவ்வாறு வாழ்ந்திருக்கிறார் என அவர் தெரிவித்திருக்கிறார்.
