தமிழ் சினிமாவில் தற்சமயம் வரவேற்பை பெற்று வரும் நடிகைகளின் முக்கியமானவராக நடிகை துஷாரா விஜயன் இருந்து வருகிறார் துஷாரா விஜயன். இயக்குனர் பா.ரஞ்சித் இயக்கிய நட்சத்திரங்கள் நகர்கிறது சார்பட்டா பரம்பரை போன்ற திரைப்படங்கள் மூலமாக பிரபலம் அடைந்தார்.
பிறகு தனிபட்ட நடிப்புக்கு வரவேற்பு கிடைத்தது. அதனை தொடர்ந்து நிகழ்ச்சி ரஜினி நடித்த வேட்டையன் மாதிரியான திரைப்படங்களிலேயே அவருக்கு வாய்ப்புகள் கிடைத்தது.
தொடர்ந்து இப்பொழுது நிறைய திரைப்படங்களில் நடித்ததன் மூலம் பெரும்பாலும் அந்த கதாபாத்திரத்திற்கு முக்கியத்துவம் இருந்தால் மட்டும் தான் அதை தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார் துஷாரா விஜயன்.

இந்த நிலையில் இது குறித்த அவரிடம் கேட்டபொழுது சினிமாவில் தொடர்ந்து ஆணாதிக்க தன்மை என்பது அதிகமாக இருந்து வருகிறது. தற்போதைய தலைமுறையினரின் மத்தியில் இருக்கிறது.
அதிலிருந்து சில திரைப்படங்கள்தான் மாற்றமாக வருகிறது. அப்படியான படங்களில் எனக்கு வாய்ப்பு கிடைப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது. ஏதோ படத்திற்காக வந்தோம் என்று வருகிற கதாபாத்திரத்தில் நான் என்றைக்குமே நடிக்க மாட்டேன் என்று கூறியிருக்கிறார் துஷாரா விஜயன்.






