நல்ல நல்ல திரை கதைகளாக தேர்ந்தெடுத்து அதன் மூலமாக மக்கள் மத்தியில் தனக்கென தனி வரவேற்பை பிடித்து வருகிறார் நடிகை துஷாரா விஜயன்.
பெரும்பாலும் துஷாரா விஜயன் நடிக்கும் திரைப்படங்களுக்கு வரவேற்பு கிடைப்பதற்கான முக்கிய காரணம் அவரது நடிப்பு தான். மற்ற நடிகைகள் போல இல்லாமல் அவர் நடிக்கும் திரைப்படங்களில் துஷாரா விஜயன் ஒரு தனிப்பட்ட கதாபாத்திரமாக மக்கள் மத்தியில் தெரிவார்.
அந்த அளவிற்கு சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தக் கூடியவர் துஷாரா விஜயன். சார்பாட்டா பரம்பரை திரைப்படத்திலேயே அவருடைய கதாபாத்திரத்தை மிகச் சிறப்பாக செய்திருந்தார். அதனை தொடர்ந்து அவருக்கு நிறைய பட வாய்ப்புகள் கிடைக்க துவங்கின.

துஷாரா விஜயன் காதல்:
தொடர்ந்து ராயன் திரைப்படத்தில் மிக முக்கியமான ஒரு கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். ஒட்டுமொத்த கதையுமே அவரை மையமாக வைத்து தான் உருவாகி இருந்தது. அந்த திரைப்படத்திலும் மிகச் சிறப்பாக நடித்திருந்தார்.
சமீபத்தில் வேட்டையன் திரைப்படத்திலும் முக்கிய கதாபாத்திரத்தில்தான் அவர் நடித்திருந்தார். பத்து நிமிடம் வரும் கதாபாத்திரமாக இருந்தாலும் முக்கிய கதாபாத்திரமாக நடிக்க வேண்டும் என்பது துஷாரா விஜயனின் எண்ணமாக இருக்கிறது.

இந்த நிலையில் சமீபத்தில் ஒரு பேட்டியில் அவரிடம் யாரையாவது காதலித்து உள்ளீர்களா? என்று கேட்கப்பட்டது அதற்கு பதில் அளித்த துஷாரா விஜயன் எனது வாழ்க்கையில் நிறைய நபர்களை நான் காதலித்திருக்கிறேன். சமீபத்தில் கூட ஒருவரை காதலித்தேன் என்று கூறியிருக்கிறார் சமீபத்தில் யாரை காதலித்தீர்கள் என்று கேட்ட பொழுது அதற்கு அவர் விடையே கூறவில்லை. அது யாராக இருக்கும் என்பதே இப்பொழுது ரசிகர்களின் கேள்வியாக இருந்து வருகிறது.