கொட்டுக்காளி தோல்விக்கு இதுதான் காரணம்.. நான் தியேட்டருக்கே கொண்டு வந்திருக்க மாட்டேன்… அமீர் ஓப்பன் டாக்!.
நகைச்சுவை நடிகராக இருந்து தற்போது தமிழ் சினிமாவில் முன்னணி கதாபாத்திரங்களை ஏற்று நடித்துக் கொண்டிருக்கும் நடிகர் தான் சூரி. ரசிகர்களின் மத்தியில் நகைச்சுவை நடிகராக அறியப்பட்ட இவர், விடுதலை பாகம் ஒன்றில் முன்னணி கதாபாத்திரத்தில் நடித்ததன் மூலம் ரசிகர்களின் மனதில் நடிகராக தற்போது வலம் வந்து கொண்டிருக்கிறார்.
அவரது நடிப்பில் வந்த விடுதலை பாகம் ஒன்று, கருடன் ஆகிய திரைப்படங்கள் நல்ல வரவேற்பு பெற்ற நிலையில், தற்போது சிவகார்த்திகேயன் தயாரிப்பில் பி.எஸ் வினோத்ராஜ் இயக்கத்தில் வெளிவந்த திரைப்படம் கொட்டுக்காளி. தற்போது இந்த திரைப்படம் திரையரங்குகளில் வெளியாகி ஓடிக்கொண்டிருக்கும் நிலையில், இந்த படத்தை பற்றி இயக்குனரும், நடிகருமான அமீர் கூறியிருக்கும் தகவலானது தற்போது சமூக வலைத்தளங்கள் வைரலாகி வருகிறது.
கொட்டுக்காளி திரைப்படம்
நடிகர் சூரி, நடிகை அன்னாபென் நடிப்பில் வெளிவந்த திரைப்படம் கொட்டுக்காளி. இந்த திரைப்படத்தை கூழாங்கல் படத்தின் இயக்குனர் பி. எஸ் வினோத்ராஜ் இயக்கி இருந்தார். கொட்டுக்காளி திரைப்படத்தின் ட்ரெய்லர் வெளியாகி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்ற நிலையில், இந்த படம் சர்வதேச திரையரங்குகளில் வெளியிடப்பட்டு பல விருதுகளை வாங்கி இருக்கிறது.

இந்நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு கொட்டுக்காளி திரைப்படம் திரையரங்குகளில் வெளியானது. ஆனால் கலவையான விமர்சனம் பெற்று வந்த கொட்டுக்காளி படத்தைப் பற்றி தற்போது இயக்குனர் அமீர் கூறியிருக்கும் கருத்து ஒன்று சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவி வருகிறது.
கொட்டுக்காளி பற்றி இயக்குனர் அமீர் கூறியது
இயக்குனராகவும், நடிகராகவும் வலம் வந்து கொண்டிருக்கும் அமீர் ஒரு படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பில் கொட்டுக்காளி திரைப்படத்தை பற்றி கூறியிருக்கிறார். அவர் கூறும்போது ஒரு திரைப்படம் என்பது பார்க்கும் பார்வையாளருக்கு பிடித்திருக்க வேண்டும். ஒரு தாக்கத்தை ஏற்படுத்த வேண்டும் என கூறினார்.
கொட்டுக்காளி ஒரு ஃபெஸ்டிவல் திரைப்படம். ஆனால் இது வெகுஜன திரைப்படம் கிடையாது. அதற்காக அந்த திரைப்படத்தை நான் நல்ல படம் என் இல்லை என்று நான் கூறவில்லை.

சர்வதேச விருதுகளுக்காக தயாரிக்கப்பட்ட ஒரு திரைப்படம் பல சர்வதேச விருதுகளை பெற்றிருக்கிறது. ஆனால் அந்தத் திரைப்படத்தை வெகுஜன சினிமாவுடன் போட்டி போட வைப்பது என்பது ஒரு வன்முறை தான் என அவர் கூறியிருக்கிறார். தனிப்பட்ட முறையில் என்னால் அதை ஏற்றுக்கொள்ள முடியாது எனவும் கூறி இருக்கிறார்.
சர்வதேச விருதுகளுக்காக தயாரிக்கப்பட்ட கொட்டுக்காளி திரைப்படத்தை சாதாரணமாக குடும்பத்துடன் 150 ரூபாய் கொடுத்து பார்க்கும் மக்கள் இது என்ன படம் என்று இயக்குனர்களை திட்டுவதை நாம் சமூக வலைத்தளங்களில் பார்க்கிறோம். ஏன் அவ்வாறு அவர்கள் திட்டுகிறார்கள். பணம் கொடுத்து பார்ப்பதினால் தான் அவர்கள் அவ்வாறு செய்கிறார்கள்.
எனவே பார்வையாளர்களின் மனநிலைக்கு ஏற்றவாறு படத்தை நாம் எடுக்க வேண்டும். நான் இந்த திரைப்படத்தை தயாரித்து இருந்தால், இதை திரையரங்குகளுக்கு கொண்டு வந்திருக்க மாட்டேன்.
வணிக நோக்கத்தில் இந்த படத்தை கொண்டு வந்து திணிக்க வேண்டிய அவசியம் இல்லை. வேண்டுமென்றால் இந்த திரைப்படத்தை ஓடிடி தளத்தில் விற்று இருக்க வேண்டும். இவரின் கருத்து தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.