Connect with us

தமிழ் சினிமா மேலதான் எல்லா தப்பும்.. மலையாள படத்துக்கு அதுதான் ப்ளஸ்.. விளக்கம் கொடுத்த ஏ.ஆர் முருகதாஸ்!..

ar murugadoss

News

தமிழ் சினிமா மேலதான் எல்லா தப்பும்.. மலையாள படத்துக்கு அதுதான் ப்ளஸ்.. விளக்கம் கொடுத்த ஏ.ஆர் முருகதாஸ்!..

Social Media Bar

Director AR Murugadoss: தமிழில் நிறைய வெற்றி படங்களை கொடுத்தவர் இயக்குனர் ஏ.ஆர் முருகதாஸ். தீனா, ரமணா, கத்தி, கஜினி போன்ற பல திரைப்படங்கள் தமிழில் பெரும் வெற்றியை கொடுத்திருக்கின்றன. தொடர்ந்து விஜய்யை வைத்து சர்க்கார் திரைப்படத்தையும் இயக்கியிருந்தார் ஏ.ஆர் முருகதாஸ்.

பொதுவாக ஏ.ஆர் முருகதாஸை பொருத்தவரை தனது திரைப்படங்களில் ஏதாவது ஒரு அரசியலை பேசி இருப்பார். கத்தி, சர்க்கார், ரமணா மாதிரியான திரைப்படங்களில் அவற்றை பார்த்திருக்க முடியும். ஆனால் கடந்த சில வருடங்களாக ஏ.ஆர் முருகதாஸிற்கு தமிழ் சினிமாவில் பெரிதாக வாய்ப்புகள் இல்லை என்று கூறப்படுகிறது.

Director AR Murugadoss Stills
Director AR Murugadoss Stills

இத்தனைக்கும் தமிழ் சினிமாவில் இத்தனை வெற்றி படங்களை கொடுத்த பிறக்கும் கூட ஏ.ஆர் முருகதாஸிற்கு எதற்காக வாய்ப்புகள் கிடைக்கவில்லை என்பது மட்டும் புரியவில்லை. இந்த நிலையில் மலையாள சினிமாக்கள் தொடர்ந்து தமிழில் வெற்றி பெற்று வருவது குறித்து தனது கருத்தை கூறியிருக்கிறார் ஏ.ஆர் முருகதாஸ்.

விளக்கம் கொடுத்த ஏ.ஆர் முருகதாஸ்:

அதில் அவர் கூறும் பொழுது குறைந்த பட்ஜெட்டில் படம் எடுப்பதற்கான வாய்ப்பு என்பது மலையாள சினிமாவில் அதிகமாகவே இருக்கிறது. அதனால்தான் அவர்கள் சிறப்பான திரைப்படங்களை வெளியிட்டு வருகின்றனர்.

ஆனால் தமிழ் சினிமாவில் அப்படியான படங்களை எடுப்பதற்கான வாய்ப்புகளை குறைவாக இருக்கின்றன. உதாரணமாக தமிழில் சில நாட்களுக்கு முன்பு வந்த டாடா திரைப்படம் சிறப்பான திரைப்படமாக இருந்தது.

அதே மாதிரியான திரைப்படங்கள் ஆனால் அதிகமாக வரவில்லை என்பதை நாம் கவனிக்க வேண்டும். அதே சமயம் மலையாளத்தில் ஒரு மாதத்திலேயே எக்கச்சக்கமான குறைந்த பட்ஜெட்டிலான படங்கள் வருகின்றன. அவற்றை நானும் கூட ரசித்து பார்த்தேன். இதுதான் தமிழ் சினிமாவில் படங்கள் வராததற்கு பிரச்சினையாக இருக்கின்றன.

குறைந்த பட்ஜெட்டில் படம் வந்து ஓடவில்லை என்று சொல்வதெல்லாம் உண்மையை கிடையாது குறைந்த பட்ஜெட்டில் படங்களே வருவதில்லை என்பதுதான் உண்மை என்று கூறுகிறார் ஏ.ஆர் முருகதாஸ்.

To Top