இண்டர்வல் ப்ளாக்ல மொத்த ஏ.வி.எம் ஸ்டுடியோவையும் துவம்சம் பண்றீங்க!.. இயக்குனரால் கலாய் மெட்டிரியல் ஆன இளையராஜா படம்!.

Ilayaraja : இளையராஜாவின் வாழ்க்கை வரலாற்று திரைப்படத்தில் தனுஷ் நடிக்க போகிறார் என்பதுதான் தற்சமயம் தமிழ் சினிமாவில் பிரபலமாக பேசப்பட்டு வரும் விஷயமாக இருக்கிறது. தனிப்பட்ட வாழ்க்கையில் இளையராஜா எப்படிப்பட்டவராக இருந்தாலும் இசையை பொருத்தவரை இளையராஜாவிற்கு நிகரான இன்னொரு இசையமைப்பாளரை தமிழ் சினிமாவில் சொல்லி விட முடியாது.

அந்த அளவிற்கு எக்கச்சக்கமான திரைப்படங்களுக்கு சிறப்பான பாடல்களை கொடுத்தவர் இளையராஜா. எனவே இளையராஜாவின் வாழ்க்கை படமாக்கப்படுகிறது என்பது ஒரு தன்னம்பிக்கையை ஊட்டும் விஷயமாக இருக்கும் என்பதால் பலரும் அதற்கு ஆதரவு தெரிவித்து வருகின்றனர்.

ilayaraja-1
ilayaraja-1
Social Media Bar

முதலில் இந்த கதையை படமாக்குவதற்கு மாரி செல்வராஜிடம்தான் பேசப்பட்டிருந்தது. ஆனால் அதன் பிறகு என்ன காரணத்தினாலோ அருண் மாதேஸ்வரனை இந்த படத்திற்கு இயக்குனராக தேர்ந்தெடுத்தனர். அருண் மாதேஸ்வரனால் இந்த திரைப்படத்தை சிறப்பாக எடுத்த முடியுமா என்பதுதான் தற்சமயம் ரசிகர்களின் கேள்வியாக இருக்கிறது.

ஏனெனில் மாரி செல்வராஜை பொறுத்தவரை அவரால் இளையராஜாவின் கதையை படமாக்க முடியும் என்று பலருக்கும் நம்பிக்கை இருக்கிறது ஆனால் அருண் மாதேஸ்வரன் கேப்டன் மில்லர் மாதிரியான திரைப்படங்களை இயக்கியவர்.

ilayaraja-biopic
ilayaraja-biopic

அவர் இயக்கும் திரைப்படத்தில் இளையராஜாவுக்கே சண்டை காட்சிகள் வைத்தாலும் ஆச்சரியப்படுவதற்கு இல்லை என்பதே நெட்டிசன்களின் பார்வையாக இருக்கிறது. இதனை தொடர்ந்து அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் இளையராஜா திரைப்படம் எப்படியெல்லாம் இருக்கும் என்று கேலி செய்யும் வகையில் மீம்கள் இணையத்தில் வலம் வர துவங்கியிருக்கின்றன.

இருந்தாலும் தனுஷ் இந்த திரைப்படத்தில் நடிப்பதால் அவர் கண்டிப்பாக அப்படியான காட்சிகளுக்கு இடம் கொடுக்க மாட்டார் என்றும் பேச்சுக்கள் இருக்கின்றன.