Connect with us

ஒரு காலத்துல சம்பளம் கேட்டப்ப எல்லாம் சிரிச்சாங்க!.. இப்போ அதிர்ச்சியாகும்படி சம்பளம் கேட்கும் அட்லீ!..

atlee

News

ஒரு காலத்துல சம்பளம் கேட்டப்ப எல்லாம் சிரிச்சாங்க!.. இப்போ அதிர்ச்சியாகும்படி சம்பளம் கேட்கும் அட்லீ!..

Social Media Bar

Director Atlee : தமிழ் சினிமாவில் தொடர்ந்து வெற்றி படங்களை கொடுத்த இயக்குனர்களில் முக்கியமானவர் இயக்குனர் அட்லி. இயக்குனர் சங்கரிடம் உதவி இயக்குனராக பணிபுரிந்து வந்த அட்லி ஒரு கட்டத்தில் அவரிடம் இருந்து தனியாக படம் இயக்க துவங்கினார்.

அவரது முதல் திரைப்படமான ராஜா ராணி திரைப்படம் தமிழில் நல்ல வரவேற்பு பெற்றது. அதனை தொடர்ந்து நிறைய திரைப்படங்கள் எடுக்கத் தொடங்கினார். அந்த சமயத்தில்தான் நடிகர் விஜய்யுடன் இவருக்கு பழக்கம் ஏற்பட்டது.

தொடர்ந்து விஜய்யை வைத்து படங்கள் எடுத்து வந்தார் அட்லி. மெர்சல், பிகில் என்று அட்லி விஜய்யை வைத்து எடுத்த திரைப்படங்கள் எல்லாம் நல்ல வெற்றியை கொடுத்தது. இருந்தாலும் சில வருடங்களுக்கு முன்பு பாலிவுட்டில் படம் எடுக்க வேண்டும் என்று தமிழை விட்டு சென்றுவிட்டார் அட்லி.

atlee
atlee

பாலிவுட்டில் கிட்டத்தட்ட மூன்று வருடமாக அவர் எடுத்து வந்த திரைப்படம் ஜவான். ஷாருக்கான் இரட்டை வேடத்தில் நடிக்கும் இந்த திரைப்படத்திற்கு பாலிவுட்டில் பெரும் வரவேற்பு இருந்து வந்தது. அந்த படம் வெளியான சமயத்தில் பயங்கரமான வசூல் சாதனை கொடுத்தது.

கிட்டத்தட்ட 1000 கோடியை தாண்டிய ஒரு வசூலை ஜவான் திரைப்படம் கொடுத்துள்ளது. ஒரு காலத்தில் தமிழ் சினிமாவில் இயக்குனர்களின் சம்பளம் குறைவாக இருக்கிறது என்று பேசப்படும் பொழுது அட்லீ ”நான் ஒரு நாளில்லை ஒரு நாள் 100 கோடி சம்பளமாக வாங்குவேன் பாருங்கள் என்று கூறினாராம்.

jawan
jawan

அப்பொழுது இயக்குனர்கள் அனைவரும் அதைக் கேட்டு சிரித்தனராம் ஆனால் தற்சமயம் உண்மையிலேயே அடுத்த படத்திற்கு 100 கோடி ரூபாய் சம்பளம் வாங்கியுள்ளார் அட்லி. இந்த சம்பளத்திற்கு இவரை வைத்து தமிழில் இனி படம் பண்ண முடியுமா என்பதே சந்தேகம்தான் என்றும் கூறப்படுகிறது.

Articles

parle g
madampatty rangaraj
To Top