நடிகர் சூர்யா பல படங்களில் நடித்திருந்தாலும் கூட இயக்குனர் பாலாவுடன் அவர் நடித்த படங்கள் அனைத்துமே அவருக்கு முக்கியமான படங்கள் எனலாம்.

வெகு காலத்திற்கு பிறகு மீண்டும் பாலாவுடன் கூட்டணி போட்டார் சூர்யா. வணங்கான் எனும் பாலா இயக்கும் படத்தில் சூர்யா நடிப்பதாக இருந்தது. சூர்யாவே இந்த படத்தை தயாரித்தார். இந்த படத்தின் கதாநாயகியாக கீர்த்தி ஷெட்டி நடிக்கிறார்.
ஆனால் திடீரென சூர்யா இந்த படத்தில் இருந்து விலக்கப்பட்டார். அதற்கு பாலா விளக்கம் கொடுக்கும்போது இந்த படத்தில் வரும் கதாபாத்திரம் அந்தளவிற்கு சூர்யாவிற்கு ஒத்து வரவில்லை. எனவே இது இருவரும் ஒரு மனதாக முடிவு செய்தது என பாலா சில நாட்களுக்கு முன்பு கூறியிருந்தார்.
இந்நிலையில் இந்த படத்தில் அடுத்து யார் நடிக்க போகிறார்கள் என்கிற கேள்வி வந்தது. பாலாவும் அடுத்து யாரை கதாநாயகனாக நடிக்க வைப்பது என்பது குறித்து எந்த ஒரு சிந்தனையும் இல்லாமல் இருந்தார்.
இந்த நிலையில் தற்சமயம் அந்த படத்தில் கதாநாயகனாக நடிகர் அருண் விஜய் நடிக்க உள்ளார் என கூறப்படுகிறது. இந்த கதாபாத்திரம் அருண் விஜய்க்கு சரியாக பொருந்தும் என படக்குழு தெரிவிப்பதாக கூறப்படுகிறது.









