Tamil Cinema News
பாலா இயக்கத்தில் களம் இறங்கும் கார்பரேட் வாரிசு.. யார் இவங்களா?
தமிழ் சினிமாவில் வித்தியாசமான திரைப்படங்களை இயக்கும் இயக்குனர்களில் முக்கியமானவர் இயக்குனர் பாலா.
இயக்குனர் பாலா இயக்கும் சில திரைப்படங்கள் பெரிதாக வரவேற்பை பெறவில்லை என்றாலும் கூட தொடர்ந்து இயக்குனர் பாலாவுக்கு என்று வரவேற்பு இருக்க தான் செய்கிறது.
அந்த வகையில் நிறைய புது நடிகர்களை தமிழ் சினிமாவிற்கு அறிமுகப்படுத்தி இருக்கிறார் பாலா. முரளியின் மகனான அதர்வாவிற்கு முக்கிய திரைப்படமாக பாலா இயக்கத்தில் வந்த படம் தான் பரதேசி.
அந்த திரைப்படத்திற்கு பிறகு தான் அதர்வாவிற்கு வாய்ப்புகள் அதிகமாக கிடைக்க தொடங்கியது. அந்த மாதிரி ஒரு இயக்குனராக பாலா இருப்பதால் நிறைய நடிகர்கள் அவருடைய இயக்கத்தில் ஒரு திரைப்படத்திலாவது நடிக்க வேண்டும் என்று நினைக்கின்றனர்.
இந்த நிலையில் டிவிஎஸ் குழுமத்தில் உள்ள முக்கியமான வாரிசு ஒருவர் நடிகராக அறிமுகமாக இருப்பதாக தகவல்கள் வெளியாகி இருக்கின்றன. அந்த நடிகரின் படத்தை இயக்குனர் பாலாதான் இயக்க இருக்கிறார் என்றும் கூறப்படுகிறது.
