என் தன்மானத்துல கைய வச்சார் பாலச்சந்தர்!.. அடுத்து வாலி செஞ்சதுதான் சம்பவம்!..

Balachandar and Vaali : கண்ணதாசனுக்கு பிறகு தமிழ் சினிமாவில் வெகுவாக பாராட்டப்பட்ட ஒரு கவிஞர் என்றால் அது வாலி அவர்கள்தான். கண்ணதாசன் இருந்த சமகாலத்திலேயே அவருக்கு போட்டியாக சினிமாவில் களம் இறங்கி அவருக்கு நிகரான ஒரு இடத்தை பிடித்தவர் கவிஞர் வாலி.

அதே போல கருப்பு வெள்ளை சினிமா காலகட்டத்தில் துவங்கி விஜய் அஜித் கால கட்டம் வரை தொடர்ந்து பாடல் வரிகளை எழுதி வந்தார் வாலி. இதற்கு நடுவே சில திரைப்படங்களில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடிக்கவும் செய்தார்.

ஹேராம் திரைப்படத்தில் கூட கமல்ஹாசனின் தந்தையாக நடித்திருப்பார் வாலி. இந்த நிலையில் வாலியை நடிப்பின் பக்கம் இழுத்தவர் இயக்குனர் பாலச்சந்தர். பாலச்சந்தரின் ஒரு திரைப்படத்தை இயக்கும் போது அந்த திரைப்படத்தில் வாலிக்கு கதாபாத்திரம் கொடுக்க வேண்டும் என்று நினைத்தார்.

Social Media Bar

எனவே வாலியை அழைத்து அன்றைய படபிடிப்பை துவங்கினார் படப்பிடிப்பு துவங்கிய உடனே வாலிக்கு நடிக்க வரவில்லை கேமராவை பார்த்தவுடனே ஒரு பதற்றம் அவருக்கு வந்துவிட்டது. இதனை அடுத்து இரண்டு மணி நேரம் நடித்தும் அதில் வாலியின் நடிப்பு சரியாக வரவில்லை.

பிறகு பாலச்சந்தரை அழைத்த வாலி எனக்கு நடிப்பு வராது என்று நினைக்கிறேன். நான் பாடல் வரிகள் எழுதுவதோடு நிறுத்திக் கொள்கிறேன் வேறு யாரையாவது வைத்து படபிடிப்பை நடத்திக் கொள் என்று கூறிவிட்டார். அதற்கு பாலச்சந்தர் நாளையும் நீங்கள் வந்து நடியுங்கள் நாளையும் நீங்கள் ஒழுங்காக நடிக்கவில்லை என்றால் உங்களுக்கு நடிப்பே வரவில்லை என்று நானே ஒப்புக்கொள்கிறேன் என்று கூறிவிட்டார்.

பாலச்சந்தர் இப்படி கூறியது வாலிக்கு அவமானத்தை ஏற்படுத்தியது யாரவது ஒருவர் நமக்கு ஒரு விஷயம் வராது என்று கூறினால்தான் அதை வர வைப்பதற்கு மிகவும் முயற்சி பண்ணுவோம். எனவே பாலச்சந்தரே அப்படி கூறிய பிறகு அதிக முயற்சி செய்து மறுநாள் அந்த காட்சியை நல்லபடியாக நடித்து கொடுத்தார் வாலி.

இதை வாலி பேட்டியில் கூறும் பொழுது பாலச்சந்தர் எப்பொழுது எனது தன்மானத்தில் கை வைத்தாரோ அப்பொழுதுதான் எனக்கு நடிக்க வேண்டும் என்கிற ஆர்வம் வந்தது என கூறி இருக்கிறார்.