Connect with us

திரையரங்கின் வாசலில் கதறி அழுத சிம்ரன்.. காரணமாக இருந்த இயக்குனர்.!

Tamil Cinema News

திரையரங்கின் வாசலில் கதறி அழுத சிம்ரன்.. காரணமாக இருந்த இயக்குனர்.!

Social Media Bar

தமிழ் சினிமாவில் ஒரு சமயத்தில் வெகு பிரபலமான நடிகையாக இருந்தவர் நடிகை சிம்ரன். தமிழில் தொடர்ந்து அவர் நிறைய திரைப்படங்களில் நடித்துள்ளார். முக்கியமாக அப்போது பிரபல நடிகர்களாக இருந்த அஜித்,விஜய், சூர்யா, கமல்ஹாசன், பிரசாந்த் என அனைவருடனும் ஜோடியாக நடித்துள்ளார்.

இந்த நிலையில் அந்த சமயத்தில் வில்லியாகவும் ஒரு திரைப்படத்தில் நடித்துள்ளார் சிம்ரன். அந்த திரைப்படம்தான் பார்த்தேன் ரசித்தேன். இந்த திரைப்படத்தில் நடிகர் பிரசாந்த் கதாநாயகனாக நடித்திருப்பார். நடிகை லைலா கதாநாயகியாக நடித்திருப்பார்.

இயக்குனர் சரண் இந்த படத்தை இயக்கியிருந்தார். இதுக்குறித்து இவர் சமீபத்தில் ஒரு பேட்டியில் கூறியிருந்தார். அதில் அவர் கூறும்போது பார்த்தேன் ரசித்தேன் திரைப்படத்தை பார்த்துவிட்டு எல்லோரும் திரையரங்கை விட்டு வெளியே வந்துவிட்டனர்.

ஆனால் சிம்ரன் மட்டும் படம் முடிந்த பிறகும் அழுது கொண்டே இருந்தார். படம் நன்றாக உள்ளது என அழுகிறாரா அல்லது படம் சரியில்லை என அழுகிறாரா என தெரியவில்லை. நான் அவரை போய் பார்த்தப்போது என்னை மறைத்துகொண்டு நின்றார்.

என் கதாபாத்திரம் மிக சிறப்பாக வந்துள்ளது. நீங்கள் இவ்வளவு குறைந்த கால் ஷீட்டில் இவ்வளவு சிறப்பாக செய்வீர்கள் என எதிர்பார்க்கவில்லை. எனவே அடுத்த படத்திற்கும் எனக்கு சான்ஸ் கொடுங்கள் என கேட்டார். இதே மாதிரி ஒரு நல்ல கதாபாத்திரம் வரும்போது சொல்கிறேன் என நான் சிம்ரனிடம் கூறினேன்.

To Top