Connect with us

எனக்காக நீங்க பொண்ணு பாக்கணும்!.. படம் கமிட் பண்ண வந்த தயாரிப்பாளருக்கு ஹரி கொடுத்த டாஸ்க்!.

director hari

News

எனக்காக நீங்க பொண்ணு பாக்கணும்!.. படம் கமிட் பண்ண வந்த தயாரிப்பாளருக்கு ஹரி கொடுத்த டாஸ்க்!.

Social Media Bar

இயக்குனர் ஹரி தமிழ் சினிமாவில் முக்கியமான இயக்குனராவார். ஆரம்பத்தில் ஹரி இயக்கிய திரைப்படங்கள் எல்லாமே ஹிட் கொடுக்கும் படங்களாக இருந்தன. ஆனால் நாட்கள் செல்ல செல்ல அவரது திரைப்படங்களுக்கான வாய்ப்புகள் என்பவை தமிழ் சினிமாவில் குறைய துவங்கின.

தற்சமயம் அவரது இயக்கத்தில் வெளியான ரத்னம் திரைப்படம் கூட அவ்வளவாக வரவேற்பை பெறவில்லை என்றே கூற வேண்டும். இந்த நிலையில் ஹரி இயக்கத்தில் சாமி திரைப்படத்தை தயாரிப்பதற்காக சென்ற தயாரிப்பாளர் விஜி ஞானவேல் தனக்கு நடந்த அனுபவத்தை கூறியுள்ளார்.

சாமி படத்தை தயாரிப்பது குறித்து ஹரியிடம் பேசும்போது 1 லட்ச ரூபாய் அட்வான்ஸ் தொகை தருவதாக கூறியிருக்கிறார் தயாரிப்பாளர். ஆனால் ஹரி எனக்கு 1 லட்ச ரூபாய் முன்பணம் பத்தாது. 5 லட்ச ரூபாய் முன்பணம் கொடுக்க வேண்டும்.

மேலும் எனக்கு பொண்ணு பார்க்க செல்ல வேண்டும். அதற்கு பெரிய ஆட்கள் வேண்டும் எனவே நீங்களும் வர வேண்டும் என அழைத்து சென்றுள்ளார் ஹரி. இந்த நிகழ்வை பேட்டியில் பகிர்ந்துள்ளார் தயாரிப்பாளர் வி.ஜி. ஞானவேல்

To Top