70 லட்சம் கேட்டாரு. ஆனால் 50 லட்சத்துல படத்தை முடிச்சாரு!.. மாஸ் காட்டிய ரஜினி பட இயக்குனர்!.. இவர்கிட்ட கத்துக்கணும்!..
தமிழ் சினிமாவில் வெகு காலங்களாக பாரதிராஜாவும் பாக்கியராஜும் கொண்டாடப்படும் இயக்குனர்களாக இருந்ததற்கு முக்கிய காரணமே அவர்கள் குறைந்த பட்ஜெட்டில் திரைப்படம் இயக்கி பெரும் அளவில் ஹிட் கொடுக்க கூடியவர்கள்.
எனவேதான் எப்போதும் தயாரிப்பாளர்கள் அவரகளிடம் வாய்ப்புகளை பெறுவதற்காக காத்துக்கொண்டிருந்தனர். அந்த வகையில் சினிமா துறையில் தயாரிப்பாளர் சிவி குமாரை தூக்கி விட்டவர்தான் இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ்.
முதலில் கார்த்திக் சுப்புராஜ் ஜிகர்தண்டா திரைப்படத்தைதான் திரைப்படமாக்க இருந்தார். ஆனால் அதன் பட்ஜெட் அதிகம் என்பதால் சிவி குமார் அந்த கதை வேண்டாம். இன்னும் குறைவான பட்ஜெட்டில் திரைப்பட கதையை கொண்டு வாருங்கள் என கூறியுள்ளார்.

அதனையடுத்து கார்த்திக் சுப்புராஜ் எழுதிய கதைதான் பீட்சா. ஹீரோ வரை புது கதாநாயகன் தான் என்பதால் அந்த படத்திற்க்கு பட்ஜெட் குறைவாகவே இருந்தது. அப்போது 70 லட்சத்தில் இந்த படத்தை தயாரித்துவிடலாம் என கூறியிருக்கிறார்.
அதனை தொடர்ந்து 25 முதல் 30 நாட்கள்தான் படப்பிடிப்பு நடந்துள்ளது. ஆனால் படப்பிடிப்பு முடியும்போது 50 லட்சம்தான் அந்த படத்திற்கு செலவாகியிருந்தது. ஆனால் அந்த படம் 5 கோடிக்கும் அதிகமாக வசூல் ஈட்டி கொடுத்தது. சிவி குமார் தமிழ் சினிமாவில் கால் பதிக்க முக்கிய காரணமாக அந்த திரைப்படம் அமைந்தது. இந்த நிகழ்வை சிவி குமார் ஒரு பேட்டியில் கூறியுள்ளார்.