Tamil Cinema News
இதை எழுதிட்டின்னா உனக்கு பட சான்ஸ் தரேன்! –கே.எஸ் ரவிக்குமார் முதல் பட வாய்ப்பை எப்படி பெற்றார் தெரியுமா?
தமிழில் பல ஹிட் படங்கள் கொடுத்த முக்கியமான இயக்குனர் கே.எஸ் ரவிக்குமார். கமல் ரஜினி என தமிழின் பெரும் இயக்குனர்கள் பலரையும் வைத்து ஹிட் கொடுத்துள்ளார் கே.எஸ் ரவிக்குமார்.

இப்போது இயக்குனர்களாக இருக்கும் பலரும் தங்கள் கடந்த காலங்களில் முதல் வாய்ப்பை பெறுவதற்கு மிகவும் கஷ்டப்பட்டிருப்பார்கள். கே.எஸ் ரவிக்குமாரும் அப்படிதான் பல படங்களில் உதவி இயக்குனராக பணிப்புரிந்து வந்தார்.
அந்த சமயத்தில் சூப்பர் குட் பிலிம்ஸ் தயாரிப்பு நிறுவனத்தில் உரிமையாளரான ஆர்.பி செளத்ரியுடன் கே.எஸ் ரவிக்குமாருக்கு பழக்கமானது. கே.எஸ் ரவிக்குமாரின் திறமையை கண்ட ஆர்.பி செளத்திரி எதாவது ஒரு படத்தில் கே.எஸ் ரவிக்குமாருக்கு வாய்ப்பு அளிக்க வேண்டும் என முடிவெடுத்தார். அதே சமயம் அந்த படம் குறைந்த பட்ஜெட்டிலும் இருக்க வேண்டும்.
அப்போது ஹிந்தியில் தண்ட் என்கிற ஒரு த்ரில்லர் திரைப்படம் வெளிவந்தது. அந்த படத்தை பார்க்குமாறு கே.எஸ் ரவிக்குமாரிடம் ஆர்.பி செளத்ரி கூறினார். கே.எஸ் ரவிக்குமாரும் அந்த படத்தை பார்த்தார். இந்த படம் எப்படி இருக்கு? என கேட்டார் ஆர்.பி செளத்ரி. படம் நல்லா இருக்கு. ஆனா கதை ஓட்டம் போர் அடிக்குது என கே.எஸ் ரவிக்குமார் கூறியுள்ளார்.
அப்படினா இதே கதைக்கு சுவாரஸ்யமான திரைக்கதை எழுதி கொண்டுவா என கூறியுள்ளார் ஆர்.பி செளத்ரி. அப்போதெல்லாம் உதவி இயக்குனர்களுக்கு இந்த மாதிரி வேலைகள் கொடுப்பது சகஜம். எனவே மூன்றே நாளில் அந்த படத்தின் கதையை எழுதி கொண்டு வந்து கொடுத்தார் கே.எஸ் ரவிக்குமார்.
அதை படித்து பார்த்த ஆர்.பி செளத்ரி படக்கதை நல்லா இருக்கு. நீயே இந்த படத்தை பண்ணிடு என கூறியுள்ளார். கே.எஸ் ரவிக்குமாருக்கு ஒரே அதிர்ச்சி. ஏனெனில் அவருக்கு கிடைத்திருக்கும் முதல் திரைப்பட வாய்ப்பு அது. ஆனால் முடிந்தவரை படத்தை சீக்கிரம் குறைந்த பட்ஜெட்டில் முடிக்க வேண்டும் என ஆர்.பி செளத்ரி கூறியுள்ளார்.
புரியாத புதிர் என்னும் அந்த படத்தை 30 நாட்களில் எடுத்து முடித்தார் கே.எஸ் ரவிக்குமார். படத்திற்கு ஆன மொத்த செலவு 29 லட்சம் மட்டுமே. 1990 இல் வெளியான இந்த படமே கே.எஸ் ரவிக்குமார் திரை வாழ்வில் அடியெடுத்து வைக்க உதவிய திரைப்படமாகும்.
