ரஜினி 169 இல் இணையும் கே.எஸ் ரவிக்குமார்..! – என்னவெல்லாம் நடக்க போகுதோ !

தமிழில் தளபதி விஜய்யை வைத்து பீஸ்ட் திரைப்படத்தை கொடுத்தன் மூலம் அடுத்து ரஜினியை வைத்து திரைப்படம் இயக்குவதற்கான வாய்ப்பை பெற்றார் இயக்குனர் நெல்சன்.

இந்த படத்தில் ரம்யா கிருஷ்ணன், பிரியங்கா மோகன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களாக நடிக்கின்றனர். இசையமைப்பாளர் அனிரூத் இந்த படத்திற்கு இசையமைக்கிறார்.

படத்தின் திரைக்கதை வேலைகள் போய் கொண்டிருக்கும் நிலையில் தற்சமயம் திரைக்கதை குழுவில் இயக்குனர் கே.எஸ் ரவிக்குமாரையும் இணைத்துள்ளது படக்குழு.

பீஸ்ட் படம் எதிர்ப்பார்த்த அளவு வெற்றியை கொடுக்கவில்லை. திரைக்கதை சற்று சொதப்பலாக இருந்ததே இதற்கு காரணம் என பேச்சுகள் இருந்தன. எனவே அதே தவறு ரஜினிகாந்த் படத்திலையும் ஆகிவிட கூடாது என்பதற்காகவும், திரைக்கதையை மேம்படுத்தவும் இயக்குனர் கே.எஸ் ரவிக்குமாரை படக்குழு அணுகியிருக்கலாம் என கூறப்படுகிறது.

ஆனால் சமீபத்தில் இயக்குனர் கே.எஸ் ரவிக்குமார் இயக்கிய படங்களும் கூட பெரிதாக வரவேற்பை பெறவில்லை. எனவே இளம் இயக்குனர்களை அணுகியிருக்கலாம் எனவும் ஒரு பக்கம் பேசப்படுகிறது.

Follow @ Google News: சினிபேட்டையில் வரும் அனைத்து சினிமா அப்டேட்களையும் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் சினிபேட்டை தளத்தை ஃபாலோ செய்யவும்.

Refresh