ஆர்.ஆர்.ஆர் படத்தை பார்த்து தெலுங்கு பட ரசிகராக மாறிய மார்வல் ரைட்டர்..!

சில நாட்களாக தென்னிந்தியாவில் எடுக்கப்படும் திரைப்படங்கள் பேன் இந்தியா அளவில் வெளியாகி பெரும் வெற்றிகளை அளித்து வருகின்றன. அதிலும் ஆர்.ஆர்.ஆர் , கே.ஜி.எஃப் 2 போன்ற திரைப்படங்கள் 1000 கோடியை தாண்டி ஓடியுள்ளன.

இந்த நிலையில் ஆர்.ஆர்.ஆர் திரைப்படம் உலகம் முழுக்கவும் கவனத்தை ஈர்த்து வருகிறது. ஹாலிவுட் திரையுலகில் மக்களுக்கு பிடித்த படமாக ஆர்.ஆர்.ஆர் அமைந்துள்ளது. பொதுவாக ஃபேண்டஸி, சூப்பர் ஹீரோக்கள் திரைப்படங்களுக்கு ஹாலிவுட் திரையுலகில் நல்ல வரவேற்பு உண்டு.

ஆர்.ஆர்.ஆர் திரைப்படமும் அதற்கு ஏற்ற படமாக இருந்ததால் ஹாலிவுட்டில் வரவேற்பை பெற்றுள்ளது.

இந்நிலையில் டாக்டர் ஸ்ட்ரேஞ்ச், சினிஸ்டர் போன்ற திரைப்படங்களுக்கு ரைட்டராக பணிப்புரிந்த ராபர்ட் கார்கில் இந்த திரைப்படம் சிறப்பாக இருந்ததாக கூறியுள்ளார். இதுவரை நான் பார்த்ததிலேயே அருமையான படம் ஆர்.ஆர்.ஆர் என அவர் கூறியுள்ளார்.

மேலும் தான் ஆர்.ஆர்.ஆர் திரைப்படத்திற்கு பெரும் ரசிகனாக ஆகிவிட்டதாக கூறியுள்ளார்.

தெலுங்கு ரசிகர்களுக்கு இந்த செய்தி மிகவும் மகிழ்ச்சி அளிப்பதாக அமைந்துள்ளது.

Refresh