இயக்குனர் ஹரிக்கே வயித்தில் புளிய கரைக்குதாம்!.. அப்படி என்ன பண்ணுனார் நம்ம மணி சார்!..

தமிழில் பிரபலமான இயக்குனர்களில் மிக முக்கியமானவர் இயக்குனர் மணிரத்தினம். பெரும்பாலும் இயக்குனர் மணிரத்தினம் இயக்கும் திரைப்படங்கள் எல்லாம் நல்ல வெற்றியை கொடுக்கக்கூடியதாகவே இருந்து வந்துள்ளன.

மணிரத்தினத்தை பொருத்தவரை அவர் இயக்கும் திரைப்படங்களில் அவருக்கென்று ஒரு தனிப்பட்ட பாணியை கொண்டிருப்பார் திரைப்படத்தின் ஒளிப்பதிவிலும் வசனங்களிலும் மாறுபட்ட தன்மையிருப்பதை மணிரத்தினத்தின் திரைப்படங்களில் பார்க்க முடியும்.

மணிரத்தினத்தின் திரைப்படங்களான நாயகன், உயிரே, ரோஜா மாதிரியான திரைப்படங்கள் அதிகபட்சம் கீழ்தட்டு மக்களை பற்றி பேசுவதாக இருக்காது. இயக்குனர் கௌதம் மேனனை போலவே மணிரத்தினமும் தொடர்ந்து எலைட் மக்களை டார்கெட் செய்துதான் திரைப்படங்கள் இயக்கி வந்துள்ளார்.

thug-life
thug-life
Social Media Bar

ஆனால் தற்சமயம் மணிரத்தினம் நடிகர் கமல்ஹாசனை வைத்து இயக்கி வரும் திரைப்படம் தக் லைஃப். இந்த திரைப்படம் குறித்து ஏற்கனவே மக்கள் மத்தியில் நிறைய வரவேற்புகள் இருந்து வருகின்றன. இந்த படத்தின் டைட்டில் டீசர் வெளியான போதே படத்திற்கான வரவேற்பு அதிகரித்தது.

இந்த நிலையில் இந்த திரைப்படம் முழுக்க முழுக்க வெற்றிமாறன் மாதிரியான இயக்குனர்கள் பாணியில் இருப்பதாக கூறப்படுகிறது. அதாவது இந்த திரைப்படம் எலைட் மக்கள் மட்டும் இல்லாமல் வெற்றிமாறன் இயக்குவது போல கீழ்த்தட்டு மக்களை காட்டும் வகையில் அமைந்திருப்பதாக கூறப்படுகிறது.

இயக்குனர் ஹரியே ஆச்சரியப்படும் வகையில் அவருக்கு நிகரான சண்டை காட்சிகளை மணிரத்தினம் இந்த திரைப்படத்தில் வைத்திருக்கிறாராம். பொதுவாக மணிரத்தினம் திரைப்படத்தில் வாகனங்கள் பறப்பது போன்ற சண்டை காட்சிகளை பார்க்க முடியாது ஆனால் அவற்றை தக் லைஃப் திரைப்படத்தில் பார்க்கலாம் என்று கூறப்படுகிறது.