தமிழக அரசு இந்த உணவை தடை செய்ய வேண்டும்!.. துவண்டு விழுந்த சிறுவன்!.. கடுப்பான இயக்குனர் மோகன் ஜி!.

மாறி வரும் வளர்ச்சிக்கு ஏற்ப உணவு முறைகளிலும் மாற்றம் ஏற்பட்டு வருகிறது. ஆனால் பெரும்பாலும் துரித உணவுகள் என அறிமுகமாகும் உணவுகள் உடலுக்கு கேடு விளைவிப்பதாகவே உள்ளன. ஏற்கனவே ஒரு முறை சவர்மா உணவுகளை சாப்பிட்டதால் பலருக்கும் உடல் ரீதியான உபாதைகள் ஏற்பட்டதை பார்க்க முடிந்தது.

இப்படியாக தற்சமயம் ஸ்மோக் பிஸ்கட் என்னும் உணவு திருவிழாக்களில் அதிகமாக பிரபலமாகி வருகிறது. திரவ நைட்ரஜனில் மூழ்கடிக்கப்பட்ட பிஸ்கட்டை நம் வாயில் போடுவார்கள். இதனால் நமது வாய் மற்றும் மூக்கு பகுதிகளில் இருந்து புகை வருவதை பார்க்க முடியும்.

mohan-G
mohan-G
Social Media Bar

இது பார்க்க நன்றாக இருப்பதால் பலரும் இதை வாங்கி உண்கின்றனர். ஆனால் இது உடலுக்கு தீங்கு விளைவிக்கும் உணவு ஆகும். மேலும் சிறு வயது குழந்தைகளுக்கு இது அதிக பாதிப்பை ஏற்படுத்தும். இந்த நிலையில் வட இந்தியாவில் ஒரு விழாவில் ஸ்மோக் பிஸ்கட் சாப்பிட்ட குழந்தைக்கு அங்கேயே வயிற்றில் எறிச்சல் ஏற்பட்டு மயக்கமடைந்துள்ளார்.

இதனை சமூக வலைத்தளத்தில் பகிர்ந்த பிரபல இயக்குனர் மோகன் ஜி இது போன்று விற்கும் SmokeBiscuit என்ற திண்பண்டத்தை உடனடியாக தடை செய்ய வேண்டும்.. குழந்தைகள் புகையை பார்த்து ஆசையாக சாப்பிட அடம் பிடிப்பார்கள்.. அதில் ஊற்றப்படுவது LiquidNitrogen.. ஒரு ஸ்பூன் உட்கொண்டால் கூட உயிருக்கு ஆபத்து.. தமிழக அரச  இதற்கு தடை விதிக்க வேண்டும் என கூறியுள்ளார்.

இவரது பதிவுக்கு ஆதரவுகள் கூடி வருகிறது.