Cinema History
மிஸ்கின் பாடல்கள் சரியில்லை..? – மாரி செல்வராஜின் கேள்விக்கு மிஸ்கின் அளித்த பதில்.
இயக்குனர் மாரி செல்வராஜ் மற்றும் இயக்குனர் மிஸ்கின். இருவருமே திரை துறையில் மிகவும் முக்கியமான நபர்கள் எனலாம். வித்தியாசமான கதை களத்தில் திரைப்படங்கள் எடுப்பவர்கள்.
ஒரு சமயம் மாரி செல்வராஜ் பேட்டி ஒன்றில் பேசும்போது தமிழ் சினிமாவில் பாடல்கள் குறித்து பேசினார். அப்போது ஒரு பெண்ணும் ஆணும் ஆடும்போது அதை காதல் என கொள்ளலாம். பல பெண்ணும் பல ஆணும் ஆடும்போது அதை கொண்டாட்டம் என கொள்ளலாம். ஆனால் ஒரு பெண்ணை சுற்றி ஆயிரம் ஆண்கள் ஆடுவதை எப்படி எடுத்துக்கொள்வது? என கேட்டிருந்தார்.
இந்த மாதிரியான பாடல்கள் மிஸ்கின் திரைப்படங்களில் இடம் பெற்றுள்ளது. வாழ மீனுக்கும் விலங்க மீனுக்கும் கல்யாணம் மற்றும் கத்தால கண்ணால போன்ற பாடல்களில் ஆடும் ஒரு பெண்ணை சுற்றி பல ஆண்கள் ஆடுவது போன்ற காட்சி இடம் பெற்றிருக்கிறது.
எனவே இதுக்குறித்து மிஸ்கினிடம் கேட்கப்பட்டது. அதற்கு மிஸ்கின் கூறும்போது “கவர்ச்சி பாடல்களை எடுக்கும்போது கூட அதில் அழகியலை வைத்தே நான் எடுத்தேன்.
ஆயிரம் ஆண்கள் ஆடினாலும் அந்த பாடலில் எந்த ஆபாசமும் இல்லை. அந்த பெண்கள் புடவை கட்டியே ஆடினார்கள். மாரி செல்வராஜ் என்ன அர்த்தத்தில் கூறினார் என எனக்கு தெரியவில்லை. ஆனால் நான் எந்த தவறான அர்த்தத்தையும் அந்த பாடலில் வைக்கவில்லை” என மிஸ்கின் தெரிவித்துள்ளார்.
To Get Tamil Cinema News Updates Via Google News Please CLICK HERE
தமிழ் சினிமா அப்டேட்களை கூகுள் நியூஸ் வழியாக பெற இங்கு க்ளிக் செய்யவும்