நிறைய படங்களை காபி அடிக்க நினைச்சுருக்கேன்? –  சுந்தர் சி ஒப்பன் டாக்..!

கோலிவுட்டில் பல ஹிட் படங்கள் கொடுத்த இயக்குனர்களில் முக்கியமானவர் சுந்தர் சி. அவர் இயக்கிய பல படங்கள் தமிழில் ப்ளாக் பஸ்டர் ஹிட் அடித்துள்ளது.

அந்த வகையில் அருணாச்சலம், அன்பே சிவம் போன்றவை அவரது சினிமா வாழ்க்கையில் முக்கியமான படங்கள் என கூறலாம். இப்போது வரை சுந்தர் சி தொடர்ந்து படங்கள் இயக்கிக்கொண்டுதான் இருக்கிறார்.

தற்சமயம் இவர் இயக்கி காஃபி வித் காதல் என்கிற திரைப்படம் வெளியானது. ஜீவா மற்றும் ஸ்ரீ காந்த் இதில் கதாநாயகர்களாக நடித்துள்ளனர். இந்த படத்தின் ப்ரோமோவுக்காக ஒரு பேட்டி கொடுத்திருந்தார் சுந்தர் சி.

அப்போது அவரிடம் நீங்கள் பல வகையான படங்களை பார்த்திருக்கிறீர்கள் அதில் ஏதாவது கொரியன் படத்தை காபி அடித்து நீங்கள் ஒரு படம் இயக்க வேண்டும் என விரும்பியதுண்டா என கேட்கப்பட்டது. அதற்கு சுந்தர் சி கொரியன் படம் என்று இல்லை. பல மொழி படங்களையும் பார்க்கும்போது அதில் சிறப்பாக இருக்கும் சில படங்களை காபி அடிக்கலாம் என நான் யோசித்ததுண்டு.

ஆனால் இதுவரை அப்படி எதுவும் எடுக்கவில்லை என கூறியுள்ளார்.

Refresh