News
காசு விஷயத்தில் வந்த பிரச்சனை.. விஜய் டிவிக்கு ஆப்பு வைத்த இயக்குனர் நெல்சன்.. தரமா ப்ளான் போட்டுருக்காரு..
தற்சமயம் தமிழ் சினிமாவில் ஒரு முக்கியமான வெற்றி இயக்குனராக இயக்குனர் நெல்சன் இருந்து வருகிறார். முதன்முதலாக கோலமாவு கோகிலா திரைப்படம் மூலமாக இவர் இயக்குனராக அறிமுகமானார்.
கோலமாவு கோகிலா திரைப்படம் நல்ல வெற்றியை பெற்றுக் கொடுத்தது அதனை தொடர்ந்து அவர் சிவகார்த்திகேயனை வைத்து டாக்டர் என்கிற படத்தை இயக்கினார். அது இன்னும் நல்ல வெற்றியை கொடுத்தது. இந்த நிலையில் ஜெயிலர் திரைப்படம் மொத்தமாக நெல்சனுக்கு பெரிய வரவேற்பு பெற்றுக்கொடுத்தது.
விஜய் டிவிக்கு வைத்த ஆப்பு:
இந்த நிலையில் அடுத்து ஜெயிலர் படத்தின் இரண்டாம் பாகத்தை இயக்க இருக்கிறார் நெல்சன். இதற்கு நடுவே இவரது தயாரிப்பில் நடிகர் கவின் நடிப்பில் ப்ளடி பக்கர் என்கிற திரைப்படம் உருவாகி வருகிறது.
அடிப்படையில் நெல்சன் விஜய் டிவியில் இருந்து சினிமாவிற்கு வந்தவர்தான் எனவே இந்த படத்தின் சாட்டிலைட் உரிமத்தை விஜய் டிவிக்கு விற்பதற்கு நினைத்தார். ஆனால் விஜய் டிவி இந்த படத்திற்கு ஒரு கோடி ரூபாய்தான் தர முடியும் என்று கூறிவிட்டது.
ஆனால் இவர் இன்னும் அதிகமான தொகைக்கு இதை விற்கலாம் என்று நினைத்து இருந்தால் எனவே விஜய் டிவியை கைவிட்டுவிட்டு தற்சமயம் சன் டிவி நிறுவனத்தினம் இது குறித்து பேச்சுவார்த்தை நடத்தி இருக்கிறார் நெல்சன்.
சன் பிக்சர்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில்தான் ஜெயிலர் திரைப்படம் வெளியாகி பெரும் வெற்றியை கொடுத்தது. எனவே இவர் திரைப்படத்தின் சாட்டிலைட் உரிமைத்தை கொடுக்கிறார் என்று தெரிந்ததுமே கலாநிதி மாறனே மூன்று கோடி ரூபாய்க்கு அதை வாங்கிக் கொள்வதாக கூறிவிட்டாராம்.
இதனை அடுத்து தற்சமயம் சன் டிவியில் அந்த படத்தை விற்க முடிவு செய்திருக்கிறார் நெல்சன்
