Connect with us

அவர் முன்னாடி போய் நிக்க முடியல..! தனுஷிடம் வாய்ப்பை இழந்த ராம்.. இதுதான் காரணம்..!

Tamil Cinema News

அவர் முன்னாடி போய் நிக்க முடியல..! தனுஷிடம் வாய்ப்பை இழந்த ராம்.. இதுதான் காரணம்..!

Social Media Bar

கற்றது தமிழ் திரைப்படம் மூலமாக தமிழ் சினிமாவில் இயக்குனராக அறிமுகமானவர் இயக்குனர் ராம். ராம் இயக்கும் திரைப்படங்கள் எல்லாம் தமிழ் சினிமாவில் முற்றிலும் மாறுப்பட்ட திரைப்படமாக இருக்கும்.

ஆனால் கமர்ஷியல் மார்க்கெட்டை பொறுத்தவரை அங்கு ராமின் படங்களுக்கு அவ்வளவாக வரவேற்பு இல்லை என்றுதான் கூற வேண்டும். ஏனெனில் பெரும்பாலும் ராம் இயக்கும் படங்களின் கதை அம்சங்கள் ரசிகர்கள் மத்தியில் பிரபலமடைவதில்லை.

அப்படியும் கூட தங்க மீன்கள் திரைப்படத்திற்கு ஒரு வரவேற்பு கிடைத்தது. இந்த திரைப்படத்தை ராம் இயக்கி அவரே நடித்திருந்தார். இந்த நிலையில் தற்சமயம் அவரது இயக்கத்தில் வெளிவந்த பறந்து போ திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.

dhanush

dhanush

இந்த நிலையில் தனுஷோடு படம் இயக்க வாய்ப்பு கிடைத்தது குறித்து ஒரு பேட்டியில் கூறியுள்ளார் ராம். அதில் அவர் கூறும்போது கற்றது தமிழ் முடித்தவுடனேயே சதாம் உசேன் என ஒரு படம் இயக்க இருந்தேன். அந்த சமயத்தில்தான் தனுஷ் பொல்லாதவன் திரைப்படத்தில் நடித்து கொண்டிருந்தார்.

அவரிடம் நான் கற்றது தமிழ் இயக்குனருன்னு சொல்லி அவர் முன்னாடி போய் நிக்க முடியல.. ரெண்டாவது படத்துக்கே தனுஷிடம் போய் நிற்க வேண்டுமா என விட்டுவிட்டேன் என கூறியுள்ளார் ராம்.

To Top