Connect with us

யாருகிட்டயும் உதவியே கேட்காதீங்க.. மனம் உடைந்து போன செல்வராகவன்.!

Tamil Cinema News

யாருகிட்டயும் உதவியே கேட்காதீங்க.. மனம் உடைந்து போன செல்வராகவன்.!

Social Media Bar

தமிழில் தங்களுக்கு ரசிகர்களைக் கொண்ட ஒரு சில இயக்குனர்களில் முக்கியமானவர் இயக்குனர் செல்வராகவன். முன்பெல்லாம் செல்வராகவன் இயக்கும் திரைப்படங்களுக்கு என்று தனிப்பட்ட வரவேற்பு இருந்து வந்தது.

ஆனால் சமீப காலங்களாக செல்வராகவன் இயக்கும் படங்கள் பெரிதாக வரவேற்பை பெறுவதில்லை. அதனால் செல்வராகவனும் திரைப்படங்களை இயக்குவதை காட்டிலும் படங்களில் நடிப்பதில் அதிக ஆர்வம் காட்டி வருகிறார்.

அப்படியாக அவர் நடிக்கும் ஒரு சில திரைப்படங்களும் நல்ல வரவேற்பை பெற்று வருகின்றன. அடிக்கடி மக்களுக்கு கருத்து கூறும் வகையில் ஏதாவது ஒரு வீடியோவை வெளியிடுவது செல்வராகவனுக்கு வழக்கமான விஷயமாக இருந்து வருகிறது.

selvaragavan

அந்த வகையில் சமீபத்தில் அவர் வெளியிட்ட வீடியோ மிகுந்த மனவருத்தத்தை அவருக்கு ஏற்படுத்தி இருக்கிறது என்பதை குறிக்கும் வகையில் அமைந்திருந்தது.

அதில் பேசிய செல்வராகவன் இந்த உலகில் யாரிடமும் உதவி என்று மட்டும் கேட்டு விடாதீர்கள். உங்களுக்கு சின்ன உதவியை செய்தால் கூட அதை அவர்கள் காலம் முழுக்க சொல்லி காட்டுவார்கள். என்னால்தான் இவன் மேலே வந்தான் என்று அவர்கள் கூறுவார்கள்.

எனவே இந்த உலகத்தை நம்பாதீர்கள் என்று பேசி இருந்தார். செல்வராகவன் அவரது சொந்த வாழ்க்கையில் ஏதாவது பிரச்சனை இருக்கலாம் அதனால்தான் இப்படி பேசியிருக்கிறார் என்று இது குறித்து சினிமா வட்டாரத்தில் பேச்சுக்கள் இருக்கின்றன.

To Top