தனுஷ் இல்லன்னா சிம்பு நடிச்சிருந்தா நல்லா வந்திருக்க வேண்டிய படம்!. மனம் கலங்கிய சேரன்!.

Dhanush and Simbu : இயக்குனர் பாக்யராஜிற்கு பிறகு குடும்ப அடியன்ஸுக்கு அதிகமாக பிடித்த ஒரு இயக்குனர் என்றால் அது இயக்குனர் சேரன்தான் பாக்யராஜிற்கும் சேரனுக்கும் நிறைய ஒற்றுமைகளும் உண்டு. பாக்கியராஜ் எப்படி குடும்பங்கள் கொண்டாடும் திரைப்படங்களை இயக்கி அதில் அவர் கதாநாயகனாக நடித்து பிரபலமானாரோ அதே விஷயத்தைதான் சேரனும் செய்தார்.

சேரன் இயக்கிய திரைப்படங்கள் குடும்பங்கள் பார்க்கும் படங்களாக இருந்தன. அதேபோல குடும்பங்கள் கொண்டாடும் மற்ற இயக்குனர்கள் திரைப்படங்களிலும் கதாநாயகனாக நடித்தார் சேரன். அப்படி அவர் நடித்த ஆட்டோகிராப், தவமாய் தவமிருந்து போன்ற திரைப்படங்கள் அப்போது வெகுவாக பிரபலமாக இருந்தன.

Social Media Bar

ஆட்டோகிராப் திரைப்படத்திற்கு பிறகு சேரனின் திரைப்படங்கள் மக்கள் மத்தியில் கவனம் பெற துவங்கின. அதனை தொடர்ந்து அவர் நிறைய திரைப்படங்களை இயக்கினார். அதில் ஒரு திரைப்படம்தான் மாயக்கண்ணாடி.

மாயக்கண்ணாடி திரைப்படத்தைப் பொறுத்தவரை வழக்கமாக நடிப்பது போன்ற குடும்ப கதாபாத்திரமாக இதில் நடிக்காமல் சற்று மாறுபட்ட கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். ஆனால் அந்த திரைப்படம் பெரிதாக வெற்றியடையவில்லை.

படம் தோல்வியடைய இதுதான் காரணம்:

அது குறித்து ஒரு பேட்டியில் அவர் பேசும்பொழுது நான் ஒவ்வொரு திரைப்படத்திற்கும் கதை எழுதும் பொழுதும் அதில் வேறு நடிகர்களைதான் நடிக்க வைக்க பார்ப்பேன். ஆனால் அவர்கள் யாரிடமும் வாய்ப்பு கிடைக்காத காரணத்தினால் இறுதியில் நானே அதில் கதாநாயகனாக நடிக்க வேண்டிய சூழ்நிலை ஏற்படும்.

mayakannadi
mayakannadi

மாயக்கண்ணாடி திரைப்படத்தைப் பொறுத்த வரையில் சிம்பு அல்லது தனுசை தான் கதாநாயகனாக நடிக்க வைக்க வேண்டும் என்று ஆசைப்பட்டேன். ஒருவேளை அவர்களில் யாராவது ஒருவர் இந்த திரைப்படத்தில் கதாநாயகனாக நடித்திருந்தால் கண்டிப்பாக இந்த திரைப்படம் நல்ல வெற்றியை பெற்றிருக்கும்.

ஆனால் நான் நடித்தது அவ்வளவாக மக்கள் ஏற்றுக்கொள்ளும்படி இல்லாத காரணத்தினால் அந்த திரைப்படம் தோல்வியை கண்டது என்று வெளிப்படையாக கூறி இருக்கிறார் சேரன்.