Connect with us

ரஜினியா இருந்தாலும் என்னால் அதை செய்ய முடியாது!.. தயாரிப்பு நிறுவனத்திடம் மறுத்த ஷங்கர்!.. டெரரான ஆளா இருப்பார் போல!..

rajinikanth shankar

News

ரஜினியா இருந்தாலும் என்னால் அதை செய்ய முடியாது!.. தயாரிப்பு நிறுவனத்திடம் மறுத்த ஷங்கர்!.. டெரரான ஆளா இருப்பார் போல!..

Social Media Bar

தமிழ் சினிமாவில் அதிக பட்ஜெட்டில் திரைப்படம் இயக்கும் இயக்குனர்களில் முக்கியமானவர் இயக்குனர் ஷங்கர். இயக்குனர் ஷங்கர் இயக்கும் திரைப்படங்கள் எல்லாமே பெரும் பட்ஜெட் திரைப்படங்களாகதான் இருக்கும்.

ஒருவேளை அந்த படங்கள் குறைந்த பட்ஜெட் படங்களாக இருந்தாலும் அவற்றில் பாடல்களுக்கு அதிக செலவு செய்து அதிக பட்ஜெட் திரைப்படங்களாக மாற்றிவிடுவார். உதாரணத்திற்கு நண்பன் திரைப்படம் ஒரு குறைந்த பட்ஜெட் திரைப்படம்தான். ஆனால் அதில் பாடல்களுக்கு அதிக செலவு செய்து அதிக பட்ஜெட் படமாக்கி இருப்பார் ஷங்கர்.

ஷங்கர் முதன் முதலாக ரஜினிகாந்தை வைத்து இயக்கிய திரைப்படம் சிவாஜி. இந்த திரைப்படத்தின் கதையை அவர் ஏ.வி.எம் நிறுவனத்திடம்தான் முதலில் கூறினார். அந்த கதையை கேட்ட ஏ.வி.எம் சரவணன் இந்த படத்தில் ரஜினி நடித்தால் நன்றாக இருக்கும்.

rajinikanth
rajinikanth

எனவே ரஜினியிடம் சென்று இந்த படத்தின் கதையை கூறுங்கள். அவர் நடித்தால் நன்றாக இருக்கும் என்றார் ஏ.வி.எம் சரவணன். அப்போது ஷங்கர் கொஞ்சம் தயங்கி நின்றார். என்னவென்று கேட்டப்போது இதுவரை எந்த நடிகரிடமும் போய் நான் கதை சொன்னது கிடையாது சார்.

அவர்களே என் கதையை கேட்டுவிட்டு நடிப்பதுதான் வழக்கம் என்றார். ஆனால் ஏ.வி.எம் சரவணன் அதற்காகவெல்லாம் கோபித்துக்கொள்ளவில்லை. அப்படியென்றால் அந்த கதையை ஒரு டேப்பில் ரெக்கார்ட் செய்து கொடுங்கள் என்றார். ஷங்கரும் அவ்வாறே செய்தார்.

அதை ரஜினிகாந்திடம் அனுப்பிய ஏ.வி.எம் சரவணன் அந்த கதையை கேட்க சொன்னார். அதை கேட்டதுமே கதை ரஜினிக்கு பிடித்துவிட்டது. அதன் பிறகு படப்பிடிப்பு துவங்கிய பிறகும் கூட பலமுறை பிரச்சனை செய்துள்ளார் ஷங்கர்.

ஆனால் அப்போது ஏ.வி.எம் சரவணன் அந்த படத்திற்காக வங்கிகளில் கடன் வாங்கியிருந்ததால் இந்த விஷயங்களுக்கு எல்லாம் பொறுத்து போனார். அதன் பிறகுதான் ரஜினிக்கும் ஷங்கருக்கும் நல்ல உறவு ஏற்பட்டது. இந்த விஷயத்தை தனது பேட்டியில் பகிர்ந்துள்ளார் ஏ.வி.எம் சரவணன்.

Articles

parle g
madampatty rangaraj
To Top