Tamil Cinema News
ரஜினியை வச்சே ரஜினியின் வாழ்க்கை வரலாறு… இளமை ரஜினியை பார்க்க தயாரா? ஷங்கரின் அடுத்த திட்டம்…
கருப்பு வெள்ளை சினிமா காலக்கட்டங்களில் துவங்கி இப்போது வரை பிரபலமான நடிகராக இருந்து வருபவர் நடிகர் ரஜினிகாந்த். இடையில் சில காலங்கள் ரஜினிகாந்தின் மார்க்கெட் குறைந்தது உண்மைதான். தமிழ் சினிமாவில் மார்க்கெட் குறையாத நடிகர்களே கிடையாது.
ஆனாலும் துவண்டு போகாமல் ஒரு நடிகர் தனக்கான இடத்தை பிடிப்பதுதான் அவர்களின் வெற்றியாக இருக்கிறது. பாபா திரைப்படத்தின் தோல்விக்கு பிறகு நான்கு வருடங்கள் ரஜினிகாந்த் நடிக்கவில்லை. அதற்கு பிறகு அவர் நடித்த படம் சந்திரமுகி.
சந்திரமுகி திரைப்படத்தில் ரஜினி நடிக்கும்போது இந்த படத்தில் ரஜினிக்கு மட்டுமே முக்கிய கதாபாத்திரம் கிடையாது. பிரபு, ஜோதிகா என பலருக்கும் முக்கிய கதாபாத்திரம் கொடுக்கப்பட்டுள்ளது. ஆனாலும் தனக்கு மட்டுமே அதிக முக்கியத்துவம் இருக்க வேண்டும் என ரஜினி கூறவில்லை.
ஒரு தோல்வி படத்துக்கு பிறகு நடிக்கும் எந்த நடிகரும் இப்படி ரிஸ்க் எடுக்க மாட்டார்கள். ஆனால் ரஜினி அந்த படத்தில் நடித்தார். சந்திரமுகி படம் ஒரு வருடம் ஓடி வெற்றி கொடுத்தது. பொதுவாகவே ரஜினிகாந்தை மக்களுக்கு பிடிப்பதற்கு முக்கிய காரணம் அவரும் நம்மை போல ஏழ்மையில் இருந்து வந்தவர் என்பதுதான்.
ரஜினிகாந்த் தன்னுடைய சினிமா வாழ்க்கையில் பல ஏற்ற இறக்கங்களை கண்டவர். இந்த நிலையில் ஒரு பேட்டியில் இயக்குனர் ஷங்கரிடம் பயோபிக் எடுப்பதாக இருந்தால் எந்த நபரின் கதையை எடுப்பீர்கள் என கேட்கப்பட்டது.
அதற்கு பதிலளித்த இயக்குனர் ஷங்கர் நடிகர் ரஜினியின் கதையைதான் படம் பண்ணனும்னு ஆசை இருக்கு என கூறியுள்ளார். இதுக்குறித்து ரசிகர்கள் கூறும்போது ரஜினிகாந்த் வாழ்க்கை கதையை படமாக்கினால் கண்டிப்பாக ஷங்கர் ரஜினிகாந்தைதான் அதில் நடிக்க வைப்பார்.
டீ ஏஜிங் முறையில் ரஜினிகாந்தை அதில் இளமையாக காட்ட வாய்ப்புள்ளது என கூறி வருகின்றனர்.