கதாநாயகனாக களம் இறங்கும் ஷங்கர் மகன்.. இவர்தான் இயக்குனராம்..!
தமிழ் சினிமாவில் பெரிய பட்ஜெட்டில் படம் இயக்கும் ஒரு இயக்குனராக இயக்குனர் ஷங்கர் இருந்து வருகிறார். பெரும்பாலும் இயக்குனர் ஷங்கர் இயக்கும் திரைப்படங்களுக்கு நல்ல வரவேற்பு என்பது இருந்து வருகிறது.
ஆனால் சமீப காலமாக இயக்குனர் ஷங்கர் இயக்கும் திரைப்படங்கள் பெரிதாக வரவேற்பை பெறவில்லை என்றுதான் கூற வேண்டும். அவரே இயக்கிய இந்தியன் 2 மற்றும் கேம் சேஞ்சர் இரண்டு திரைப்படங்களுமே எதிர்பார்த்த அளவிலான வரவேற்பை பெற்று தரவில்லை.
இந்த நிலையில் இயக்குனர் ஷங்கர் தனது மகன் அர்ஜித் சங்கரை இயக்குனராக்க வேண்டும் என்று நினைத்திருந்தார். இதற்காக படிப்புகளை படித்து வந்த அர்ஜித் சங்கர் கேம் சேஞ்சர் திரைப்படத்தில் இயக்குனர் சங்கருடன் உதவி இயக்குனராக பணிபுரிந்தார்.
இதனை தொடர்ந்து அவர் அடுத்து படம் இயக்கப் போகிறார் என்றே பலரும் நினைத்து வந்த நிலையில் அவர் அடுத்த திரைப்படத்தில் நடிக்க போவதாக செய்திகள் வெளியாகி இருக்கின்றன.
அதற்கான வேலைகள் மிகவும் விறுவிறுப்பாக சென்று கொண்டிருப்பதாக கூறப்படுகிறது. அடுத்த மாதத்திலேயே படத்திற்கான படப்பிடிப்பு வேலைகள் துவங்க இருப்பதாக கூறப்படுகிறது. இந்த திரைப்படத்தை அட்லியிடம் உதவி இயக்குனராக பணிபுரிந்த இயக்குனர் ஒருவர்தான் இயக்க இருக்கிறார் என்று கூறப்படுகிறது.
மேலும் இந்த படத்தில் இயக்குனர் சங்கரின் மகளான அதிதி சங்கர் சிறப்பு காட்சிகளில் வர இருப்பதாகவும் அவர் ஒரு பாடல் பாட இருப்பதாகவும் செய்திகள் வலம் வந்து கொண்டுள்ளன.