Connect with us

பொன்னியின் செல்வன் மாதிரியே இன்னொரு படம்- பறம்பு மலை சிங்கத்தை கேள்விப்பட்டுருக்கிங்களா?- சங்கரின் அடுத்த படம்

News

பொன்னியின் செல்வன் மாதிரியே இன்னொரு படம்- பறம்பு மலை சிங்கத்தை கேள்விப்பட்டுருக்கிங்களா?- சங்கரின் அடுத்த படம்

Social Media Bar

தமிழில் வெளியாகி தற்சமயம் இந்தியா முழுவதும் வசூலை குவித்த திரைப்படம் பொன்னியின் செல்வன். அதில் நடித்த  நடிகர்களில் துவங்கி இயக்குனர் மணிரத்னம் வரை அனைவருக்கும் பெரும் பேர் வாங்கி தந்த படமாக பொன்னியின் செல்வன் இருந்தது.

பொன்னியின் செல்வன் திரைப்படத்தின் இரண்டாம் பாகமானது வருகிற ஏப்ரல் மாதம் வெளியாக இருப்பதாக கூறப்பட்டுள்ளது. இந்நிலையில் இயக்குனர் சங்கர் அவர்களும் தமிழ் சினிமாவில் ஒரு வரலாற்று நாவலை படமாக்கினால் எனன் என்று யோசிக்கிறாராம்.

பொன்னியின் செல்வனை போலவே அதிகமான வாசகர்களை கொண்ட ஒரு வரலாற்று நாவல் வீரயுக நாயகன் வேள்பாரி. மூவேந்தர்களும் சேர்ந்தும் கூட தோற்கடிப்பதற்கு போராடிய, பறம்பு மலை சிங்கம் என அழைக்கப்படுகிற மன்னர் பாரியின் கதையை கொண்ட இந்த நாவல் அதிகமான வாசகர்களை கொண்ட ஒரு நாவலாகும்.

இந்த நாவலை மூன்று பாகங்கள் கொண்ட படமாக இயக்க இருக்கிறார் சங்கர். இந்த படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் பாலிவுட் நடிகர் ரன்வீர் சிங் நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது. ஏற்கனவே பத்மாவதி படத்தில் இவர் நடித்த அலாவுதீன் கில்ஜி கதாபாத்திரம் மிகவும் பிரபலமாக இருந்தது.

எனவே இந்த படத்திலும் கூட இவர் வில்லன் கதாபாத்திரத்தில் நடிக்க வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.

இது படமாக வெளியாகும் பட்சத்தில் பொன்னியின் செல்வன் வசூலை தாண்டி இது வசூல் சாதனை படைக்கும் என வேள்பாரி வாசகர்கள் பேசி வருகின்றனர்.

Bigg Boss Update

To Top