ப்ரோடியசரையும் விட்டு வைக்கல – மூவி ரீவிவர்களால் கடுப்பான தயாரிப்பாளர்.

தற்சமயம் திரையில் வெளியாகி மிகவும் பிரபலமாக பேசப்பட்டு வரும் திரைப்படம் லவ் டுடே. சமக்காலத்தில் காதலில் இருக்கும் பிரச்சனைகளை நகைச்சுவையாக பேசியிருக்கும் திரைப்படமாக இந்த படம் உள்ளது.

இந்த படம் வெளியான நாள் முதலே மக்கள் மத்தியில் அதிக வரவேற்பை பெற்று வருகிறது. வெளியாகி மூன்றே நாட்களில் படம் நல்ல வசூலை பெற்றது. படத்தின் இயக்குனர் பிரதீப் ரங்கநாதனே படத்தில் கதாநாயகனாக நடித்துள்ளார்.

இந்த படத்தை கல்பாத்தி எஸ்.அகோரம் நிறுவனம் தயாரித்துள்ளது. வழக்கமாக படம் வெளியான முதல் நாள் படம் பார்த்தவர்களிடம் படத்தை பற்றிய விமர்சனத்தை கேட்பதை யூ ட்யூப்பர்கள் வாடிக்கையாக கொண்டுள்ளனர்.

அந்த வகையில் லவ் டுடே படத்திற்கும் கூட படத்தை பற்றி மக்களிடம் விமர்சனம் கேட்டு வந்தனர். அப்போது படத்தின் தயாரிப்பாளரில் ஒருவரான அர்ச்சனா கல்பாத்தியிடம் ரங்கநாதன் எப்படி நடித்துள்ளார் என கேட்டுள்ளனர்.

யோவ் படத்தின் தயாரிப்பாளரே நாந்தான் போங்கய்யா? என கூறியுள்ளார் அர்ச்சனா.  இந்த வீடியோ தற்சமயம் ட்ரெண்டிங் ஆகி வருகிறது.

Refresh