Connect with us

வணங்கான் படத்துக்கு வந்த முதல் விமர்சனம்!.. இந்த மாதிரி எதிர்பார்க்கல!.

vanangaan movie

News

வணங்கான் படத்துக்கு வந்த முதல் விமர்சனம்!.. இந்த மாதிரி எதிர்பார்க்கல!.

Social Media Bar

தமிழில் வித்தியாசமான திரைப்படங்கள் இயக்கும் இயக்குனர்களில் முக்கியமானவர் இயக்குனர் பாலா. பாலாவை பொறுத்தவரை அவரை பொதுஜனங்கள் சைக்கோ இயக்குனர் என்று அழைத்து வந்தாலும் அவரது திரைப்படங்களுக்கு ஒரு தனிப்பட்ட வரவேற்பு இருந்து கொண்டுதான் இருக்கிறது.

இயக்குனர் பாலு மகேந்திராவிடம் உதவி இயக்குனராக பணிபுரிந்து வந்த பாலா அதற்குப் பிறகு இயக்கிய திரைப்படங்கள் பலவும் சோகமான முடிவுகளை கொண்ட படமாகதான் இருந்திருக்கின்றன. ஆனால் அவற்றிற்கு அதிக வரவேற்புகள் மக்கள் மத்தியில் இருந்தன.

சோக க்ளைமேக்ஸ் படங்கள்:

உதாரணத்திற்கு அவரது முதல் படமான சேது திரைப்படத்தை எடுத்துக் கொள்ளலாம். அந்த திரைப்படம் சோகமான முடிவை கொண்ட திரைப்படம்தான் அதற்கு பிறகு அவர் இயக்கிய நான் கடவுள், அவன் இவன் மாதிரியான திரைப்படங்களில் சோக கிளைமாக்ஸ்தான் இருந்தது.

ஆனாலும் பாலா திரைப்படத்தை இயக்கும்விதம் மக்களை அதிகமாக கவர்ந்தது. மேலும் நடிப்பு தெரியாத ஆட்கள் அவரிடம் வந்தால் கூட அவர்களிடம் நடிப்பை வாங்கி விடுவார் பாலா. இதனாலே அவர் இயக்கிய அவன் இவன், பரதேசி மாதிரியான படங்கள் எல்லாம் நல்ல வரவேற்பை பெற்றது.

ஆனால் சமீப காலமாக பாலா திரைப்படங்கள் எதுவுமே பெரிதாக வெற்றி பெறவில்லை. இது பாலாவுக்கு அதிக அதிருப்தியை ஏற்படுத்தி இருக்கிறது. இந்த நிலையில்தான் தற்சமயம் அவர் திரைப்படத்தை இயக்கியிருக்கிறார். இந்த திரைப்படத்தில் அருண் விஜய் கதாநாயகனாக நடித்திருக்கிறார்.

கதாநாயகர் மாற்றம்:

ஆரம்பத்தில் இந்த படத்தில் சூர்யாதான் கதாநாயகனாக நடிப்பதாக இருந்தது. ஆனால் சில கருத்து வேறுபாடுகள் காரணமாக சூர்யா அந்த படத்தில் இருந்து விலகி விட்டார். இந்த நிலையில்தான் அருண் விஜய் இந்த படத்தில் நடித்திருக்கிறார்.

இந்த திரைப்படத்தை பாலா பெரிதும் நம்பி வருகிறார். இதன் மூலம்தான் திரும்பவும் சினிமாவில் ரீ எண்ட்ரி கொடுக்க வேண்டும் என்று இருக்கிறார் பாலா. இந்த படம் வருகிற ஆகஸ்ட் மாதம் வெளியாக இருக்கிறது. இந்த நிலையில் இந்த படத்தை பார்த்த தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி இதுகுறித்து பதிவு ஒன்றை வெளியிட்டு இருக்கிறார்.

அதில் அவர் கூறும்போது பாலா இயக்கிய வணங்கான் படத்தை பார்த்து மிகவும் நெகிழ்ச்சியாக இருக்கிறேன். உண்மையில் அந்த படத்தை பார்த்து நான் வாயடைத்து போய்விட்டேன். அருண் விஜய் நடிப்பு அபாரமாக இருக்கிறது. ஒட்டுமொத்த பட குழுவுக்கும் என்னுடைய வாழ்த்துக்கள் மீண்டும் பாலா தன்னை யார் என்று நிரூபித்து விட்டார் என்று மகிழ்ச்சியோடு பகிர்ந்திருந்தார் இதனை அடுத்து இந்த படத்திற்கு வரவேற்பு அதிகரிக்க துவங்கியிருக்கிறது.

To Top