Connect with us

ஒரே கதையை ரெண்டு ஹீரோவுக்கு எடுத்த இயக்குனர்!.. ஏமாந்து போன விஷால் மற்றும் சிம்பு!..

Cinema History

ஒரே கதையை ரெண்டு ஹீரோவுக்கு எடுத்த இயக்குனர்!.. ஏமாந்து போன விஷால் மற்றும் சிம்பு!..

Social Media Bar

Actor Vishal and Simbu : நடிகர்களுக்கு எழுதப்படும் கதைகள் கை மாறுவது என்பது தமிழ் சினிமாவில் சாதாரணமாக நடக்கக்கூடிய விஷயம் தான் ஆனால் ஒரே கதையையே இரண்டு நடிகர்களுக்கு கூறி அவர்களை வைத்து அதை படமாக்கிய சம்பவம் தமிழ் சினிமாவில் நடந்திருக்கிறது.

இயக்குனர் தருண் கோபி ஒரு கதை ஒன்றை எழுதி இருந்தார் ஊருக்குள் பிரச்சனை செய்துவிட்டு வெளியூரில் சென்று அமைதியாக வாழும் வாலிபன் திரும்ப அந்த பிரச்சனையை சந்திப்பதாக கதை இருக்கும். இதே மாதிரியான கதை தமிழ் சினிமாவில் பலமுறை வந்திருந்தாலும் அதை அவரது பாணியில் எழுதியிருந்தார் தருண் கோபி.

அந்த கலையை முதலில் சிம்புவிடம் சென்று கூறினார். ஆனால் சிம்பு அப்பொழுது கொஞ்சம் படங்களி நடித்து கொண்டு இருந்தால் அந்த திரைப்படத்தில் இப்பொழுது நடிக்க முடியாது என்று கூறிவிட்டார். அதனை தொடர்ந்து அதே கதையை விஷாலுக்கு கூறி திமிரு என்கிற திரைப்படமாக அதை உருவாக்கினார் இயக்குனர் தருண் கோபி.

2007 இல் வெளியான திமிரு திரைப்படம் பெரும் வெற்றியை கொடுத்தது அதை கேள்விப்பட்ட சிம்பு அந்த கதை தனக்காக சொல்லப்பட்ட கதைதானே அவரிடம் இதே போல வேறு ஏதும் கதை இருக்கிறதா என்று கேட்போம் என்று கேட்க எதற்கு இது மாதிரி வேறு கதை இதே கதையை திரும்ப உங்களை வைத்து எடுக்கிறேன் என்று கூறி ஒரு வருடத்திற்குள்ளாகவே அடுத்த படத்தை 2008 இல் வெளியிட்டார் தருண் கோபி

அதுதான் காளை என்னும் திரைப்படம். காளை திரைப்படத்தில் உள்ள சிம்புவின் கதாபாத்திரமும் திமிரு படத்தில் வரும் விஷாலின் கதாபாத்திரங்களும் கிட்டத்தட்ட ஒரே மாதிரி தான் இருக்கும் ஒரே கதையை சற்று மாறுதல் செய்து இரண்டு திரைப்படங்களாக எடுத்திருப்பார் இயக்குனர் தருண் கோபி.

To Top