News
சக்தியை வைத்து புதிய அத்தியாயத்தை திறந்த திருச்செல்வம்!.. எதிர்நீச்சல் அடுத்த பாகம் வர போகுதா?.
இயக்குனர் திருச்செல்வம் வெகு காலங்களாகவே சன் டிவியில் சீரியல்களை இயக்கி வருகிறார். இந்த நிலையில் கோலங்கள் என்கிற சீரியலை நிறைய எபிசோடுகளுக்கு கொண்டு சென்று பெரும் வெற்றியை கொடுத்தார் திருச்செல்வம்.
இந்த நிலையில் தமிழில் அவர் துவங்கிய நாடகம்தான் எதிர்நீச்சல். கோலங்கள் சீரியலை விடவும் எதிர்நீச்சல் சீரியலை அதிக எபிசோடுகளுக்கு கொண்டு செல்ல திட்டமிட்டிருந்தார் திருச்செல்வம். இதில் முக்கிய கதாபாத்திரமாக இருந்தது ஆதி குணசேகரன் என்னும் கதாபாத்திரம்தான்.

அந்த கதாபாத்திரத்தில் நடித்த நடிகர் மாரிமுத்து இறப்பிற்கு பிறகு நாடகம் தொய்வை காண துவங்கியது. மேலும் அந்த சீரியல் தொடர்பான சன் டிவி நிறைய மாற்றங்களை செய்ய சொன்னதாக கூறப்படுகிறது. ஆனால் திருச்செல்வம் ஏற்கனவே நாடகத்திற்கான கதையை எழுதி வைத்திருப்பதால் அவருக்கு கதையை மாற்றுவதில் விருப்பம் இருக்கவில்லை.
இயக்குனரின் அடுத்த ப்ளான்:
எனவே எதிர்நீச்சல் சீரியலை இந்த மாதத்தோடு அவர் முடிக்க உள்ளதாக கூறப்பட்டது. ஆனால் கிட்டத்தட்ட 1500 எபிசோடுகளுக்கான கதையை திருச்செல்வம் ஏற்கனவே எழுதிவிட்டாராம். இதற்கு பிறகு கதையில் சக்தி கதாபாத்திரம்தான் முக்கியமான கதாபாத்திரமாக வரும் என கூறப்படுகிறது.

எனவே அந்த கதையை கொண்டு எதிர்நீச்சல் சீரியலின் அடுத்த பாகத்தை இயக்க இருக்கிறாராம் திருச்செல்வம். ஆனால் அதை சன் டிவியிலேயே அவர் தொடர்வாரா என்பதுதான் தற்சமயம் கேள்விக்குறியான விஷயமாக இருக்கிறது.
