Connect with us

கல்கி 2898 படத்தின் முழுக்கதை இதுதான்?.. ட்ரைலர்லையே தெரிஞ்சுட்டு… ஆனா சக்சஸ்தான்!..

kalki

News

கல்கி 2898 படத்தின் முழுக்கதை இதுதான்?.. ட்ரைலர்லையே தெரிஞ்சுட்டு… ஆனா சக்சஸ்தான்!..

Social Media Bar

பாகுபலி திரைப்படத்திற்கு பிறகு தொடர்ந்து பேன் இந்தியா திரைப்படங்களாக மட்டுமே நடித்து வருகிறார் நடிகர் பிரபாஸ். ஆனால் பாகுபலி படத்திற்கு பிறகு அவர் நடித்த படங்கள் அதே அளவிலான வரவேற்பை பெற்று தரவில்லை.

அந்த வகையில் அவர் நடித்த ஆதி புருஷ், சாகோ மாதிரியான திரைப்படங்கள் எதுவுமே வெற்றியை கொடுக்கவில்லை. ஏற்கனவே விஷ்ணு பகவானின் அவதாரமாகதான் இவர் ஆதிபுருஷ் படத்தில் நடித்திருந்தார்.

பேன் இந்தியாவிற்கு போன பிரபாஸ்:

இந்த நிலையில் இந்தியாவிலேயே பெரும் பட்ஜெட்டில் ஹாலிவுட் தரத்தில் இவர் நடித்து வரும் திரைப்படம் கல்கி 2898 ஏ.டி. அதாவது புராண கதைகளின்படி கலியுகத்தின் முடிவில் விஷ்ணு பகவான் திரும்பவும் கல்கி என்கிற தன்னுடைய பத்தாவது அவதாரத்தை எடுப்பார் என கூறப்பட்டுள்ளது.

மகாபாரதத்தில் அழிவே இல்லாத வாழ்க்கையை சாபமாக பெறும் அசுவத்தாமனுக்கும் அவர் மூலமாகதான் சாப விமோச்சனம் கிடைக்கும் என கதையுண்டு. அதை கொண்டு எதிர்காலத்தில் அதாவது 2898 ஆம் ஆண்டில் பூமிக்கு கல்கி அவதாரம் வருவதாகவும் அதை அசுவத்தாமனாக நடித்திருக்கும் அமிதாப் காப்பாற்றுவதாகவும் கதை அமைந்துள்ளது

கல்கி அவதாரம்:

இதற்காக கலியுகம் உருவானது முதலே அமிதாப் காத்திருக்கிறார். இதற்கு நடுவே ஜெய்ராம் இந்தியாவில் புதிய கடவுள் ஒருவரை அறிமுகப்படுத்தியிருக்கிறார். தீபிகா படுகோனின் வயிற்றில்தான் கல்கி அவதாரம் கருவாக உருவாகிறது.

இதனையடுத்து மொத்த பூமியிலும் இயற்கை என்பதே அழிந்து பாலை நிலமான நிலையில் கல்கி அவதாரம் உருவான அந்த சமயத்தில் ஒரு செடி தளிர் விடுகிறது. இதற்கு நடுவே அந்த குழந்தை பிறக்க கூடாது என்பதற்காக ஜெய்ராமின் புதிய கடவுள் குழு தீபிகா படுகோனின் தலைக்கு விலை நிர்ணயம் செய்கின்றனர்.

பிரபாஸ் மனமாற்றம்:

இப்படி தலைக்கு விலை நிர்ணயம் செய்யப்பட்டவர்களை பிடித்து கொடுத்து பணம் சம்பாதிப்பவர்தான் நடிகர் பிரபாஸ். எனவே அவர் தீபிகா படுகோனை பிடிக்க செல்கிறார். ஆனால் அசுவத்தாமனான அமிதாப்பச்சனை தாண்டி சென்றுதான் அவரை பிடிக்க முடியும்.

முதலில் தீபிகாவை பிடிக்க நினைத்தாலும் பிறகு பிறக்க போகும் அந்த குழந்தைதான் இந்த பூமியை மீண்டும் சரி செய்யும் என்பதை அறியும் பிரபாஸ் அந்த குழந்தையை காப்பாற்ற உதவுகிறார்.

இதில் கமலின் கதாபாத்திரம் என்னவாக இருக்கும் என தெரியவில்லை. ஆனால் கண்டிப்பாக இந்த படத்திற்கு பெரும் வரவேற்பு இருக்கும் என தெரிகிறது.

To Top