16 நாட்களில் என்ன படம் பண்ண முடியுமோ பண்ணிக்க!.. இயக்குனருக்கு சரத்குமார் கொடுத்த டாஸ்க்.. மாஸ் காட்டிய இயக்குனர்!..

ஒரு திரைப்படத்தை ஒரு வருடத்திற்கு இயக்குவது என்பதெல்லாம் இப்போது சினிமாவில் நடந்து வரும் விஷயங்களே என்று கூற வேண்டும். இதற்கு முன்பெல்லாம் சினிமாவில் திரைப்படங்கள் இயக்குவது என்பது இயக்குனர்களுக்கு மிக சுலபமான விஷயமாக இருந்தது.

வெள்ளிக்கிழமை விரதம் என்கிற திரைப்படத்தை இயக்குனர் ஆர். தியாகராஜன் ஏழே நாட்களில் படப்பிடிப்பை எடுத்து முடித்தாராம். அப்படியான கில்லாடி இயக்குனர்களை எல்லாம் கொண்டதுதான் தமிழ் சினிமா.

sarathkumar
sarathkumar
Social Media Bar

அந்த மாதிரி இயக்குனர் வெங்கடேஷிற்கும் முதல் படத்தின்போதே பெரும் சம்பவம் நடந்துள்ளது. அதனை அவர் பகிர்ந்துள்ளார். முதல் படத்தை பொறுத்தவரை அதன் வசனம் மற்றும் கதையில்தான் இயக்குனர்கள் அதிக முக்கியத்துவம் கொடுப்பார்கள்.

சரத்குமார் வைத்த டாஸ்க்:

இந்த திரைப்படத்தில் கதாநாயகனாக சரத்குமார் நடிக்க இருந்தார். இந்த நிலையில் சரத்குமாருக்கு நாட்டாமை திரைப்படத்தில் வாய்ப்பு கிடைக்கவே அதில் நடிக்க சென்றுவிட்டார். அதற்கு பிறகு வெங்கடேஷ் படத்தில் நடிப்பதாக கூறியதையே அவர் மறந்துவிட்டார்.

நாட்டாமை வெற்றியை தொடர்ந்து நிறைய திரைப்படங்களில் கமிட் ஆகி இருந்தார் சரத்குமார். இந்த நிலையில் அவரை நேரில் சந்தித்த வெங்கடேஷ் “சார் உங்களை வைத்து படம் பண்றதா சொல்லியிருந்தேனே சார். ஒரு 30 நாள் கால்ஷீட் வேணும்” என கேட்டுள்ளார்.

அதை கேட்ட சரத்குமார் அதற்கெல்லாம் வாய்ப்பே இல்லை. நான் அடுத்தடுத்து நிறைய திரைப்படங்களில் நடிக்க வேண்டி இருக்கு என கூறியுள்ளார். இதை கேட்டதும் இயக்குனர் கண்ணீர் விட்டு அழ துவங்கி விட்டார்.

அதை பார்த்த சரத்குமார் 30 நாள் எல்லாம் என்னால் முடியாது 16 நாள் ஒதுக்கி தருகிறேன். அதற்குள் படத்தை எடுத்துக்கொள்கிறீர்களா என கேட்டுள்ளார். அதற்கு சரி என்று தலையாட்டிய இயக்குனர் வெங்கடேஷ் அந்த குறுகிய நாளிலேயே சரத்குமாரை வைத்து மகா பிரபு என்னும் படத்தை இயக்கி அதை வெற்றியடையவும் செய்திருக்கிறார்.