கௌதம் மேனன் படத்தை பார்த்து திருந்தினேன்!.. வெற்றிமாறனை திருத்திய அந்த நிகழ்ச்சி!..

தமிழில் அதிகமாக திரைப்படங்கள் இயக்காமலேயே மக்கள் மத்தியில் பிரபலமான இயக்குனர்களில் இயக்குனர் வெற்றிமாறனும் ஒருவர். ஆடுகளம் திரைப்படத்தை இயக்கியப்போதே அனைவரின் கவனமும் வெற்றிமாறனின் பக்கம் திரும்பியது.

தமிழ் சினிமாவிலேயே சேவல் சண்டை தொடர்பாக இவ்வளவு பெரிய ஆய்வு செய்து திரைப்படங்கள் வந்ததில்லை. வெற்றிமாறன் முதலில் இயக்குனர் பாலு மகேந்திராவிடம் உதவி இயக்குனராக பணிப்புரிந்தார். தமிழ் சினிமாவில் பாலு மகேந்திராவே ஒரு வித்தியாசமான திரைப்படங்கள் இயக்கும் இயக்குனராகதான் இருந்து வந்தார்.

இந்த நிலையில் அதன் வெளிபாடை வெற்றிமாறனிடமும் பார்க்க முடிகிறது. தற்சமயம் வெற்றிமாறன் இயக்கிய விடுதலை திரைப்படம் தமிழ் சினிமாவில் நல்ல வெற்றியை கொடுத்தது. இதனை தொடர்ந்து தற்சமயம் அதன் இரண்டாம் பாகம் தயாராகி வருகிறது.

vetrimaaran
vetrimaaran
Social Media Bar

இந்த நிலையில் வெற்றிமாறன் தனது புகைப்பிடிக்கும் பழக்கத்தை விட்டது குறித்து ஒரு பேட்டியில் கூறியுள்ளார். அதில் அவர் கூறும்போது நான் கல்லூரி படிக்கும் காலத்தில் இரவு காட்சிக்காக வாரணம் ஆயிரம் திரைப்படத்திற்கு சென்றேன்.

அந்த படத்தை பார்த்துவிட்டு வெளியே வந்து ஒரு சிகரெட்டை பிடித்தேன். அதுதான் என்னுடைய கடைசி சிகரெட். அதற்கு பிறகு இப்போது வரை புகைப்பிடிக்கவில்லை என கூறுகிறார் வெற்றிமாறன். வாரணம் ஆயிரம் திரைப்படத்தில் தொடர்ந்து சிகரெட் பிடித்ததால் அப்பா கதாபாத்திரம் புற்றுநோய் வந்து இறப்பதாக காட்சிகள் இருக்கும்.

அந்த காட்சிதான் வெற்றிமாறனின் மனமாற்றத்திற்கு காரணமாக அமைந்ததாக அவர் தனது பேட்டியில் கூறியுள்ளார்.