Cinema History
அஜித் இவ்வளவு நாள் மீடியாவை கண்டுக்காம இருக்கிறதுக்கு காரணம் ரஜினியாம்? – இந்த கதை தெரியுமா?
நம் கோலிவுட் சினிமாவில் பெரும் நடிகர்களில் முக்கியமானவர் அஜித். தமிழில் இவர் பல திரைப்படங்கள் ஹிட் கொடுத்துள்ளார். ஆனால் அஜித்திற்கு ரசிகர் மன்றம் கிடையாது. அவரே ரசிகர் மன்றங்களை கலைத்துவிட்டார். எந்த ஒரு விருது வழங்கும் விழாவிலும் அஜித் கலந்துக்கொள்ள மாட்டார்.

அதே போல பத்திரிக்கைகளை தொடர்பு கொண்டு அவர்களிடம் எந்த பேட்டியையும் அஜித் கொடுக்க மாட்டார். அஜித் ரசிகர்களுக்கு அது ஏன் என தெரிந்திருக்கும். ஆனால் சிலருக்கு தெரியாமலும் இருக்கும்.
ரஜினி நடித்த பில்லா திரைப்படம் அஜித்தை வைத்து ரீமேக் செய்யப்பட்டது. இந்த படம் தமிழில் அமோக வெற்றி பெற்றது. இந்த படத்தின் வெற்றியை தொடர்ந்து பத்திரிக்கையாளர்கள் அஜித்தை பேட்டி எடுத்தனர். அப்போதெல்லாம் அஜித் பேட்டிகளில் பேசுவார்.
இந்த நிலையில் அஜித்திடம் ரஜினி படம் அளவிற்கு ஹிட் கொடுத்து இருக்கிறீர்கள்? அடுத்த ரஜினி இடத்தை பிடிகக் நினைக்கிறீர்களா? என கேட்க ஆமாம் சூப்பர் ஸ்டார் இடத்தை பிடிக்க யாருக்குதான் ஆசை இருக்காது என கூறியுள்ளார் அஜித்.
இதை வைத்து பல்வேறு தவறான விமர்சனங்களை எதிர்க்கொண்டு மனமுடைந்தார் அஜித். அப்போது அவரை சந்தித்த ரஜினிகாந்த். “இந்த பத்திரிக்கை காரர்கள் எல்லாம் இப்படிதான் இருப்பாங்க. நீ அதை ஒன்னும் பெரிசு பண்ணிக்காதீங்க. முடிஞ்சவரை அவங்கள கண்டுக்காதீங்க.” என கூறியுள்ளார்.
அதனால்தான் இப்போது வரை அஜித் பத்திரிக்கையாளர் என்றாலே ஒதுக்கி விடுகிறார்.
