சம்பளம்லாம் ஒன்னும் இல்லங்க – டான் இயக்குனருக்கு நடந்த சோகம்

சமீபத்தில் சிவகார்த்திகேயன் நடித்து 100 கோடி வசூல் செய்த திரைப்படம் டான். இந்த படத்தை இயக்குனர் அட்லியிடம் உதவி இயக்குனராக இருந்த சிபி சக்ரவர்த்தி இயக்கினார்.

Social Media Bar

சினிமாவை பொறுத்தவரை அதிக உழைப்பை போட்டு மிகவும் குறைவான சம்பளம் பெறுபவர்களாக இயக்குனர்கள் இருக்கின்றனர். அந்த வகையில் டான் படத்தில் இயக்குனர் சிபி சக்ரவர்த்திக்கு மிகவும் குறைவான அளவில் சம்பளம் கொடுத்ததாக கூறப்படுகிறது.

படத்தின் மொத்த பட்ஜெட்டில் முக்கால்வாசி தொகை சிவகார்த்திகேயனுக்கு சம்பளமாக போய்விட்டதாக கூறப்படுகிறது. படத்தின் பட்ஜெட் 55 கோடி, அதில் சிவகார்த்திகேயனுக்கு சம்பளம் மட்டும் 30 கோடி ரூபாயாம். படத்தின் கதாநாயகி ப்ரியங்கா மோகனுக்கு 50 லட்சம் சம்பளமாக தரப்பட்டுள்ளது.

ஆனால் இயக்குனர் சிபி சக்ரவர்த்திக்கு வெறும் 15 லட்சம் மட்டுமே சம்பளமாக தரப்பட்டதாம். ஒரு நிகழ்ச்சியில் சிபி சக்ரவர்த்தியை பேட்டி எடுக்கும்போது “டான் படம் எடுத்துவிட்டீர்கள். லைஃப் செட்டில்தான” என கேட்க, அதற்கு இயக்குனர் மிகவும் வெறுப்பாக “சம்பளத்துல ஒண்ணுமே கைல இல்லங்க” என கூறியுள்ளார்.

படத்திற்காக முழுதாக உழைப்பவர்கள் இயக்குனர்கள் என்கிற போதும் அவர்களுக்கு அதற்கான சம்பளம் கிடைக்கவில்லை என்பது தென்னிந்திய சினிமாவில் தொடர்ந்து நடந்து வருகிறது.