Box Office
மூன்றே நாட்களில் எஸ்.கேவை மிஞ்சிய பிரதீப் ரங்கநாதன் – டிராகன் அதிகாரப்பூர்வமாக வந்த வசூல் நிலவரம்.!
பிரதீப் ரங்கநாதன் தமிழ் சினிமாவில் பிரபலமான நடிகராக இருந்து வருகிறார். பெரும்பாலும் பிரதீப் நடிக்கும் திரைப்படங்கள் எல்லாம் நல்ல வெற்றியை கொடுத்து வருகின்றன. கோமாளி திரைப்படம் மூலமாக முதன் முதலாக இயக்குனராக அறிமுகமானார் பிரதீப் ரங்கநாதன்.
அதற்கு பிறகு பிரதீப் ரங்கநாதன் நடித்த திரைப்படம் லவ் டுடே. லவ் டுடே திரைப்படம் 4 கோடிக்கு எடுக்கப்பட்டு 80 கோடி ரூபாய் வரை வெற்றியை கொடுத்தது. அதன் பிறகு பிரதீப் ரங்கநாதனின் மார்க்கெட் என்பது வேற லெவலில் உயர்ந்தது.
இந்த நிலையில் அடுத்து பிரதீப் ரங்கநாதன் நடித்து வெளியாகி இருக்கும் திரைப்படம் டிராகன். இந்த திரைப்படம் வெளியான நாள் முதலே இந்த படம் நல்ல வரவேற்பை பெற்றது. இந்த படத்திற்கே பிரதீப் ரங்கநாதன் 12 கோடி ரூபாய் சம்பளமாக வாங்கினார்.
இந்த நிலையில் படம் வெளியான மூன்றே நாளில் படம் 50 கோடி வரை வசூல் செய்துள்ளது. சிவகார்த்திகேயன் நடித்த டான் திரைப்படம் மொத்தமே 100 கோடிதான் வசூல் செய்தது. ஒரு நடிகர் 100 கோடி வசூல் கொடுக்கும் நடிகர் நிலைக்கு வருவதற்கு அதிக காலம் ஆகும்.
ஆனால் அதை இரண்டாவது படத்திலேயே சர்வ சாதாரணமாக சாதிக்க உள்ளார் பிரதீப் ரங்கநாதன். டிராகன் திரைப்படம் தமிழ்நாட்டில் 24.9 கோடியும், ஆந்திரா மற்றும் தெலுங்கானாவில் 6.25 கோடியும், கேரளா மற்றும் மற்ற மாநிலங்களில் 4.37 கோடியும், வெளிநாடுகளில் 14.7 கோடியும் வசூல் செய்துள்ளது.
இந்த செய்தியை ஏ.ஜி.எஸ் நிறுவனமே வெளியிட்டுள்ளது.
