பொதுவாகவே பிரதீப் ரங்கநாதன் நடிக்கும் திரைப்படங்களுக்கு தமிழ் சினிமாவில் எகசக்கமான வரவேற்புகள் கிடைத்து வருகின்றன.
அதற்கு தகுந்த மாதிரி காதல் கதைகளை தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார் பிரதீப் ரங்கநாதன். பெரும்பாலும் அந்த மாதிரியான கதைகள்தான் பிரதீப் ரங்கநாதனுக்கு வெற்றி படங்களாக அமைகின்றன.
லவ் டுடே, டிராகன் அதனை தொடர்ந்து இப்பொழுது நடித்திருக்கும் டூட் ஆகிய மூன்று படங்களுமே காதல் கதை அமைப்பை கொண்ட திரைப்படங்கள் தான்.
டூட் பட வெற்றி:
இது இளைஞர்கள் மத்தியில் அதிக வரவேற்பை பெறுவதால் இவருக்கு நல்ல வெற்றியை பெற்று தருகின்றன. முக்கியமாக காதல் தோல்வி படங்களாக எடுத்தும் கூட டிராகன் திரைப்படமும் இவருக்கு வெற்றி படமாக அமைந்து இருக்கிறது.
இந்த நிலையில் டூட் திரைப்படம் வெளியான 5 நாட்களில் இதுவரை 90 கோடிக்கு அதிகமாக வசூல் செய்து இருக்கிறது. டிராகன் திரைப்படத்துடன் ஒப்பிடும்போது படத்தின் வசூல் குறைவுதான் என்றாலும் கூட இதுவே இந்த படத்திற்கு நல்ல வசூல் என்று கூறப்படுகிறது.










