Connect with us

இயக்குனர் ஷங்கரின் சொத்துக்கள் முடக்கம்.. இத்தனை வருடம் கழித்து வெடித்த பூகம்பம்.!

director shankar

Tamil Cinema News

இயக்குனர் ஷங்கரின் சொத்துக்கள் முடக்கம்.. இத்தனை வருடம் கழித்து வெடித்த பூகம்பம்.!

Social Media Bar

இயக்குனர் ஷங்கர் தமிழ் சினிமாவில் பிரபலமான இயக்குனராக இருந்து வருகிறார். தமிழில் தொடர்ந்து அதிக பட்ஜெட் திரைப்படங்களை இயக்கி வருகிறார் இயக்குனர் ஷங்கர். இந்த நிலையில் ஷங்கர் இயக்கிய திரைப்படங்களில் இந்தியன் முதல்வன் திரைப்படங்களுக்கு பிறகு பெரிதாக பேசப்பட்ட திரைப்படம் எந்திரன்.

கிராபிக்ஸ் தொழில்நுட்பம் தமிழ்நாட்டில் பெரிதாக அறிமுகமாகாத காலக்கட்டத்திலேயே மிக சிறப்பாக எந்திரன் திரைப்படத்தை உருவாக்கி இருந்தார். எந்திரன் திரைப்படம் வெளியான சமயத்திலேயே அந்த படத்தில் கதை திருட்டு நடந்திருப்பதாக பேச்சுக்கள் இருந்தன.

director shankar

director shankar

ஆரூர் தமிழ்நாடன் என்பவர் தான் 2007 இல் எழுதிய ஜுகிபா என்னும் கதையை காபி அடித்துதான் எந்திரன் படம் உருவாக்கப்பட்டுள்ளது என கூறியிருந்தார். இதுக்குறித்த வழக்கில் தற்சமயம் ஷங்கருக்கு எதிராக தீர்ப்புகள் வந்துள்ளன.

எந்திரன் திரைப்படத்திற்காக ஷங்கர் 11 கோடி ரூபாய் சம்பளம் வாங்கியிருந்தார். இந்த நிலையில் அவருடைய 10.11 கோடி மதிப்பிலான சொத்துக்கள் தற்சமயம் அமலாக்கதுறையினரால் முடக்கப்பட்டுள்ளன.

Articles

parle g
madampatty rangaraj
shoji morimoto
To Top