Cinema History
நான் பண்ணாத வேலைக்கு நேஷனல் அவார்ட் கொடுத்தாங்க.. நானும் வாங்கிக்கிட்டேன்.. பிரபுதேவா படத்தில் எடிட்டருக்கு நடந்த சோகம்!..
Prabhudeva : தமிழில் உள்ள நடன கலைஞர்களில் கொஞ்சம் பிரபலமானவர் பிரபுதேவா. ஏனெனில் நடனம் மட்டும் ஆடாமல் நடிப்பு, திரைப்படம் இயக்குதல் என பல துறைகளில் இவர் பணிப்புரிந்துள்ளார்.
மேலும் பல தேசிய விருதுகளை வாங்கியுள்ளார் பிரபுதேவா. எப்படி நடன கலைஞர்களில் அதிக தேசிய விருது வாங்கிய நபராக பிரபுதேவா இருக்கிறாரோ அதே போல எடிட்டரில் அதிக தேசிய விருது வாங்கியவராக எடிட்டர் பீம்சிங் லெனின் இருக்கிறார்.
இதுவரை இவர் 6 முறை தேசிய விருதுகளை பெற்றிருக்கிறார். இந்த நிலையில் இவர்கள் இருவருமே சேர்ந்து பணிப்புரிந்த திரைப்படம் காதலன். காதலன் திரைப்படமும் வழக்கம் போல தேசிய விருதுக்கு பரிந்துரைக்கப்பட்டது.
அதில் எடிட்டருக்கும் அந்த படத்திற்கு தேசிய விருது வழங்கப்பட்டது. பொதுவாக தேசிய விருதை வழங்கும்போது என்ன காரணத்திற்காக வழங்கினார்கள் என்பதை கூறுவதுண்டு. அப்படி லெனினிடம் கூறியப்போது முக்காலா முக்காப்புலா என்னும் ஒரு பாடல் காதலன் திரைப்படத்தில் வரும்.
அந்த பாடலில் பிரபுதேவா உடல் இல்லாமல் அவரது ஆடை மட்டும் ஆடுவது போன்ற காட்சி ஒன்று இருக்கும். அந்த பாடலுக்காக அவரது உடலை பிலிமில் வெட்டி எடுத்து கஷ்டப்பட்டு அந்த பாடலை எடிட் செய்ததற்காக அந்த தேசிய விருது வழங்கப்பட்டது.
இதுக்குறித்து எடிட்டர் லெனின் ஒரு பேட்டியில் கூறும்போது அந்த விருது எனக்கு சேர வேண்டியதே இல்லை. ஏனெனில் காதலன் திரைப்படத்திற்கு கிராபிக்ஸ் வேலைகள் வேறு ஒரு குழு பார்த்தது. அவர்கள் கணினியில் போட்டு பிரபுதேவா உடலை அழைத்தனர்.
பிலிமில் வெட்டி எல்லாம் நாங்கள் ஒன்றுமே செய்யவில்லை. இருந்தாலும் வருகிற தேசிய விருதை ஏன் விட வேண்டும் என்றுதான் வாங்கி வைத்துக்கொண்டேன் என கூறியுள்ளார் லெனின்.
To Get Tamil Cinema News Updates Via Google News Please CLICK HERE
தமிழ் சினிமா அப்டேட்களை கூகுள் நியூஸ் வழியாக பெற இங்கு க்ளிக் செய்யவும்