Connect with us

கோபி சுதாகர் மேல உள்ள வன்மம்தான் அவங்களை செலக்ட் பண்ணாததுக்கு காரணமா!.. ஈரோடு மகேஷ் கொடுத்த பதில்!..

gopi sudhakar

News

கோபி சுதாகர் மேல உள்ள வன்மம்தான் அவங்களை செலக்ட் பண்ணாததுக்கு காரணமா!.. ஈரோடு மகேஷ் கொடுத்த பதில்!..

Social Media Bar

Parithabangal Gobi sudhakar : ரசிகர்கள் மத்தியில் எந்த அளவிற்கு பிரபலங்கள் இடம்பிடித்து உள்ளார்களோ அதே அளவிற்கு சமூக வலைதளத்தை சேர்ந்தவர்களும் அதிக இடத்தை பிடித்திருக்கின்றனர். முக்கியமாக யூ.டியூபர்கள் மக்கள் மத்தியில் மிகவும் பிரபலமாக இருக்கின்றனர்.

இதனால் சினிமா படங்களை புரமோஷன் செய்வதற்கு கூட பலரும் youtube பிரபலங்களையே நம்பி இருக்கின்றனர் என கூறலாம். அந்த அளவிற்கு யூட்யூப்பர்களுக்கு வரவேற்பு அதிகரித்து வருகிறது. அப்படியான பெரும்பாலான மக்கள் மத்தியில் பிரபலமாக இருப்பவர்கள் தான் கோபி சுதாகர் இவர்கள் நடத்தும் பரிதாபங்கள் சேனல் கொஞ்சம் பிரபலமானது என கூறலாம்.

கோபி சுதாகர் முதன்முதலாக சென்னைக்கு வந்த பொழுது நகைச்சுவை செய்வதற்காக கலக்கப்போவது யாரு நிகழ்ச்சியில் முயற்சி செய்தனர் அப்பொழுது அந்த நிகழ்ச்சியில் அவர்களது நகைச்சுவை பிடிக்கவில்லை என்று அவர்களை நிராகரித்து விட்டனர்.

அப்போது தாடி பாலாஜியும் ஈரோடு மகேஷும்தான் நடுவர்களாக இருந்தனர். அவர்கள் இருவரும்தான் இவர்களை நீக்கினார்கள். பிறகு கோபியும் சுதாகரும் பெரும் உச்சத்தை தொட்டனர். இந்த நிலையில் ஒரு பேட்டியில் இது குறித்து ஈரோடு மகேஷிடம் கேட்ட பொழுது எனக்கும் கோபி சுதாகருக்கும் எந்த தனிப்பட்ட விரோதமும் கிடையாது.

அந்த மேடையில் அப்போது அவர்கள் நன்றாக நடித்தால் அவர்களுக்கு வாய்ப்பு கிடைக்கும் இல்லை என்றால் கிடைக்காது அவ்வளவுதான் அப்படி பார்த்தால் விஜய் டிவியில் கலக்கப்போவது யாரு சீசன் ஐந்தில் குரேஷி  சிறப்பாக காமெடி செய்திருந்தார்.

ஆனால் அரையிறுதியில் அவனை தேர்ந்தெடுக்கவில்லை இருந்தாலும் நான் சண்டை போட்டு அவனை இறுதி கட்டத்திற்கு அழைத்துச் சென்றேன் எனவே இந்த முடிவுகள் எல்லாம் அப்போதைய சூழலை பொறுத்து எடுப்பது மட்டுமே என்று கூறியிருக்கிறார் ஈரோடு மகேஷ்.

To Top