எதிர் நீச்சல் சீரியலுக்கு எண்டு கார்டு!.. வேற வழி தெரியல குமாரு..

சன் டிவியில் அதிக மக்களின் ஆதரவோடு தொடங்கிய நாடகம் தான் எதிர்நீச்சல். ஏற்கனவே சன் டிவியில் கோலங்கள் மாதிரியான நாடகங்களை இயக்கிய இயக்குனர் திருசெல்வம்தான் இந்த நாடகத்தை இயக்குகிறார் என்பதால் இந்த நாடகத்திற்கு வரவேற்புகள் இருந்து வந்தன.

பொதுவாக நாடகங்களில் வில்லத்தனமான கதாபாத்திரத்தில் பெண்கள்தான் இருப்பார்கள். ஆனால் இந்த நாடகத்தில் ஆண்களை வில்லன்களாக வைத்திருந்தனர்.

கதையில் மாற்றம்:

இதற்கு நடுவே ஆதி குணசேகரன் என்கிற முக்கிய கதாபாத்திரத்தில் நடிகர் மாரிமுத்து நடித்திருந்தார். அந்த கதாபாத்திரத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்தது. அதன் மூலமாக எதிர்நீச்சல் நாடகமும் கூட பிரபலமடைய துவங்கியது.

Social Media Bar

இந்த நிலையில் மாரிமுத்து இடையில் காலமானதால் அவருக்கு வேல ராம மூர்த்தியை ஆதி குணசேகரனாக நடிக்க வைத்தனர். அதற்கு பிறகு கதையிலேயே பெரும் மாற்றங்கள் இருந்தன. ஆனால் அது மக்களுக்கு அவ்வளவாக பிடிக்கவில்லை.

இதனை அடுத்து எதிர்நீச்சல் சீரியலுக்கான வரவேற்புகள் குறைய துவங்கின. இதனை அடுத்து அடுத்த மாதம் ஜூலை 8க்குள் எதிர்நீச்சல் சீரியலுக்கு எண்ட் கார்டு போட ப்ளான் செய்துள்ளனராம்.

எதற்கு ஒரு மாதம்:

எதற்கு நாடகத்தை முடிக்க இந்த ஒரு மாத கால இடைவெளி என பார்க்கும்போது நாடகத்தில் இயக்குனர் எக்கச்சக்க முடிச்சுகளை ஏற்படுத்தியிருந்தார். அவற்றையெல்லாம் அவிழ்க்க வேண்டும் என்றால் அதற்கு ஒரு மாத காலம் தேவை என கூறப்படுகிறது.

இந்த ஒரு மாத காலத்தில் சக்தி மற்றும் ஜனனி இருவரின் வளர்ச்சியையும் காட்ட உள்ளனர். அதே போல ரேணுகா டான்ஸ் க்ளாஸ் மூலம் வளர்ச்சியடைய உள்ளார். நந்தினி அவருடைய மசாலா நிறுவனத்தை பெரிதாக்க  போகிறார். இப்படி அதில் உள்ள பெண்கள் அனைவரும் வளர்ச்சியடைவதுதான் அடுத்த ஒரு மாத கதையாக இருக்கும் என கூறப்படுகிறது.