TV Shows
குணசேகரன் மாறினதில் இருந்து எதுவுமே சரியில்லை!. முக்கிய கேரக்டர் எல்லாம் அவுட்டு.. கடுப்பில் இருக்கும் நேயர்கள்..
Sun TV ethir neechal Serial: சன் டிவியில் ஒளிப்பரப்பாக துவங்கியது முதலே நேயர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை ஏற்படுத்திய சீரியலாக எதிர்நீச்சல் சீரியல் இருக்கிறது. நாடகம் ஆரம்பித்தப்போது கதையின் கருவாக என்ன இருந்ததோ அதுவே நீர்த்து போகும்படி தற்சமயம் இந்த நாடகம் சென்று கொண்டுள்ளது.
வீட்டில் அடிமைத்தனத்தை தூக்கி பிடிக்கும் குடும்பத்தில் சிக்கிய பெண்கள் அதில் இருந்து எப்படி மீண்டு வருகின்றனர் என்பதே முதலில் இந்த கதையின் கருவாக இருந்தது. இதில் வெறுமனே வேடிக்கை பார்க்கும் அப்பத்தா கதாபாத்திரம் ஒன்று இருந்தது.

திடீரென அதை புரட்சிகரமான கதாபாத்திரமாக உள்ளே இறக்கினர். இந்த சீரியலில் முக்கியமான கதாபாத்திரம் ஆதி குணசேகரன் கதாபாத்திரம். வாயில் மட்டுமே பேசுவார் ஆனால் உண்மையில் பயந்த சுபாவம் கொண்டவர் என்பது போலதான் இந்த கதாபாத்திரம் முதலில் இருந்தது. ஆனால் ஆதி குணசேகரனாக நடிக்கும் நடிகர் மாரிமுத்து இறந்த பிறகு அதற்கு பதிலாக வேலராம மூர்த்தி ஆதி குணசேகரனாக நடிக்க துவங்கினார்.
அது முதலே இந்த கதாபாத்திரம் மோசமானதாக மாறியுள்ளது. ஏற்கனவே ஜீவானந்தத்தின் மனைவி கொல்லப்பட்டது குறித்தே ரசிகர்கள் அதிருப்தியில் இருந்தனர். இந்த நிலையில் கதையின் மிக முக்கிய கதாபாத்திரமான அந்த பாட்டியையும் கொன்றுள்ளனர்.
இதனை அடுத்து இந்த நாடகம் குறித்து நேயர்கள் மத்தியில் அதிருப்தி உருவாக துவங்கியுள்ளது. இப்படியே போனால் நாடகத்தின் டி.ஆர்.பி குறைய வாய்ப்பிருப்பதாக கூறப்படுகிறது.
