Connect with us

எம்மா.. ஏய்..! வேற லெவல் எண்ட்ரி குடுத்த ஆதி குணசேகரன்! – எகிறிய எதிர்நீச்சல் டிஆர்பி ரேட்டிங்!

ethir neechal vela ramamoorthy

Tamil Cinema News

எம்மா.. ஏய்..! வேற லெவல் எண்ட்ரி குடுத்த ஆதி குணசேகரன்! – எகிறிய எதிர்நீச்சல் டிஆர்பி ரேட்டிங்!

எம்மா.. ஏய்..! வேற லெவல் எண்ட்ரி குடுத்த ஆதி குணசேகரன்! – எகிறிய எதிர்நீச்சல் டிஆர்பி ரேட்டிங்!

Social Media Bar

சன் டிவியில் பிரபலமாக ஒளிபரப்பாகி வரும் சீரியல் எதிர்நீச்சல். இந்த சீரியலை கோலங்கள் சீரியலை இயக்கிய திருச்செல்வம் இயக்குகிறார். ஃப் இதில் ஆதி குணசேகரன் என்ற கதாபாத்திரத்தில் சினிமா நடிகர் மாரிமுத்து நடித்து வந்தார். ஃப் இந்த ஆதி குணசேகரன் கதாபாத்திரத்தால் மிகவும் பிரபலமடைந்த இந்த தொடர் டி ஆர் பி ரேட்டிங்கிலும் முன்னிலை வகித்தது.

இந்நிலையில்தான் சமீபத்தில் நடிகர் மாரிமுத்து திடீர் நெஞ்சுவலியால் மரணமடைந்தார். இந்த சம்பவம் திரையுலகினரை மட்டுமல்லாமல் எதிர்நீச்சல் பார்க்கும் சாதாரண மக்களையும் கூட மிகவும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது. அதன் பின்னர் இனி எதிர் நீச்சல் தொடரில் ஆதி குணசேகரனாக நடிக்கப் போவது யார் என்ற கேள்விகள் எழுந்தது.

இந்த கதாபாத்திரத்தில் நடிக்க பிரபல நடிகரும் எழுத்தாளருமான வேல ராமமூர்த்தியிடம் பேசப்பட்டு வருவதாக தகவல்கள் வெளியாகி வந்தது. சமீப காலமாக ஆதி குணசேகரின் கதாபாத்திரம் இல்லாமலேயே எதிர்நீச்சல் சீரியல் தொடர்ந்து ஒளிபரப்பாகி வந்தது. ஆனால் ஆதி குணசேகரன் கதாபாத்திரம் இருந்தபோது கிடைத்த வரவேற்பு அந்த கதாபாத்திரம் இல்லாத போது கிடைக்கவில்லை.

இந்நிலையில் நேற்று ஒளிபரப்பான எதிர்நீச்சல் சீரியலில் ஆதி குணசேகரன் கதாபாத்திரத்தில் மாரிமுத்துவிற்கு பதிலாக வேலா ராமமூர்த்தி திடீர் என்ட்ரி கொடுத்துள்ளார். ஒப்பனிங் காட்சியிலேயே போலீஸை உதைத்து தள்ளி மாஸ் என்ட்ரி கொடுத்துள்ளார் இந்த புதிய ஆதி குணசேகரன். ஆனால் மீண்டும் எதிர் நீச்சலின் டி ஆர் பி ரேட்டிங் அதிகரிக்க தொடங்கியுள்ளது. மாரிமுத்து நடித்த இந்த கதாபாத்திரத்தை வேல ராமமூர்த்தி மேலும் சிறப்பாக செய்வாரா என்பதை போகப்போகத்தான் பார்க்க வேண்டும்.

Articles

parle g
madampatty rangaraj
To Top