அட ஏன்யா இப்படி பண்றீங்க!.. எதிர்நீச்சல் சீரியல் பதிவால் ஆடிப்போன வேலராம மூர்த்தி…

சமீபகாலமாக சன் டிவியில் அதிகமாக வரவேற்பு பெற்ற ஒரு சீரியலாக இருந்து வந்த சீரியல்தான் எதிர்நீச்சல் நாடகமாகும். இந்த சீரியலை இயக்குனர் திருச்செல்வம் இயக்கியிருந்தார். சன் டிவியில் பிரபலமாக இருக்கும் சீரியல் இயக்குனர்களில் முக்கியமானவர் திருச்செல்வம்.

ஏற்கனவே அவர் இயக்கிய கோலங்கள் சீரியல் கிட்டத்தட்ட பல வருடங்கள் சன் டிவியில் ஒளிபரப்பாகி பெரும் சாதனையை படைத்தது. அதனை தொடர்ந்து பிரபலமானார் திருச்செல்வம். சில வருடங்கள் கழித்து இப்பொழுது அவர் இயக்கிய சீரியல் எதிர்நீச்சல்.

சீரியலுக்கு கிடைத்த வரவேற்பு:

எதிர்நீச்சல் சீரியல் துவங்கிய பொழுது அதற்கு எக்கச்சக்கமான வரவேற்புகள் கிடைத்தன. அதற்கு முக்கிய காரணமாக ஆதி குணசேகரன் கதாபாத்திரத்தில் நடித்த நடிகர் மாரிமுத்து இருந்தார். ஆனால் அவரது இறப்பிற்குப் பிறகு அதே கதாபாத்திரத்தில் பிறகு வேலராமமூர்த்தி நடித்தார்.

ethi-neechal
ethi-neechal
Social Media Bar

ஆனால் அதற்குப் பிறகு அந்த அளவிற்கு இந்த நாடகத்திற்கு வரவேற்பு கிடைக்கவில்லை. இந்த நிலையில் சமீபத்தில் வேக வேகமாக இந்த நாடகத்தை முடித்துள்ளனர். இதற்கு சன் டிவிக்கும் திருச்செல்வத்திற்கும் இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணம் என்று ஒரு பக்கம் பேச்சுக்கள் இருக்கின்றன.

ஷாக்கான வேலராமமூர்த்தி:

இதற்கு நடுவே எதிர்நீச்சல் சீரியலில் நடித்ததையே அவமானமாக நினைக்கிறேன் என்று வேலராமமூர்த்தி சொன்னதாக ஒரு தகவல்கள் இணையத்தில் பரவத் துவங்கின. இது குறித்த ஒரு பதிவை பார்த்து அதிர்ச்சியான வேலராமமூர்த்தி இது எவன் பார்க்கிற வேலை.

இப்படி ஒரு பேட்டி நான் கொடுக்கவே இல்லை. எதிர்நீச்சல் என்னை உலகத் தமிழர்கள் எல்லோரிடமும் கொண்டு போய் சேர்த்தது. அதில் நான் மனப்பூர்வமாக பங்காற்றினேன் என்பதே உண்மை. தயவு செய்து இதுபோன்ற தவறான பொய்யான தகவல்களை யாரும் நம்ப வேண்டாம் என்று கூறியிருக்கிறார்.