Cinema History
100 படங்கள் நடிச்சப்பிறகும் கூட அந்த ஒரு கதாபாத்திரத்தில் நடிக்க பயந்த சிவாஜி!.. காரணம் இதுதான்!.
இந்திய சினிமாவில் மட்டுமின்றி உலக சினிமா அளவிலேயே தனக்கென தனி இடத்தை பிடித்தவர்தான் நடிகர் திலகம் சிவாஜி கணேசன். சிவாஜி கணேசனை பொறுத்தவரை எத்தனை திரைப்படங்களில் நடித்தாலும் அடுத்து நடிக்கும் திரைப்படங்களில் புதுவித கதாபாத்திரம் ஒன்றில் நடிக்க வேண்டும் என்றால் அதற்காக மெனக்கெடுவார்.
இப்படி ஒருமுறை ஏ.வி.எம் நிறுவனத்தின் திரைப்படத்தில் நடிப்பதற்கு கமிட்டாகி இருந்தார் சிவாஜி கணேசன். அந்த நேரத்தில் படப்பிடிப்பு தளத்திற்கு ஏ.வி.எம் சரவணன் வந்தப்போது அங்கு சிவாஜி கணேசன் சோர்வாக அமர்ந்திருப்பதை பார்த்தார்.
பொதுவாக சிவாஜி கணேசன் இப்படி சோர்வாக அமரக்கூடிய ஆள் கிடையாது. படப்பிடிப்பு தளத்தில் எப்போதும் சிட்டாக பறந்துக்கொண்டிருப்பார். அவர் எப்படி இவ்வளவு அமைதியாக இருக்கிறார் என அவர் அருகில் சென்ற ஏ.வி.எம் சரவணன் ஏன் சிவாஜி இப்படி இருக்கிறீர்கள். உடல் நிலை எதுவும் சரியில்லையா என கேட்டுக்கொண்டே அவர் மீது கை வைத்து பார்த்துள்ளார்.
சிவாஜியின் உடல் அனலாக கொதித்துள்ளது. என்ன சார் இவ்வளவு காய்ச்சலுடன் எதற்கு படப்பிடிப்புக்கு வந்தீர்கள் என கேட்டுள்ளார் சரவணன். அதற்கு பதிலளித்த சிவாஜி நாளை வியட்நாம் வீடு என்கிற நாடகத்தில் நடிக்க உள்ளேன். அதில் எனக்கு பிராமணர் கதாபாத்திரம் கொடுக்கப்பட்டுள்ளது.
பிராமணர்களின் உடல் மொழி எனக்கு அவ்வளவாக தெரியாது. அதை சரியாக செய்யவில்லை எனில் அந்த பாத்திரம் முழுமை பெறாது. அந்த கவலையில்தான் எனக்கு காய்ச்சல் வந்துவிட்டது என கூறியுள்ளார் சிவாஜி. 100 படங்களுக்கு மேல் நடித்து இந்தியா முழுவதும் புகழ் பெற்ற பிறகும் கூட இந்த மனிதர் தனக்கு நடிப்பே தெரியாது என்பது போல பேசுகிறாரே என வியந்துள்ளார் ஏ.வி.எம் சரவணன்.
To Get Tamil Cinema News Updates Via Google News Please CLICK HERE
தமிழ் சினிமா அப்டேட்களை கூகுள் நியூஸ் வழியாக பெற இங்கு க்ளிக் செய்யவும்